ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இஷாந்த் சர்மா இந்திய அணியில் மூன்று ஃபார்மேட் கிரிக்கெட் தொடரிலும் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தோனியின் கேப்டன்ஷிப் பண்புகள் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். தோனி மூன்று வடிவ ஐசிசி கோப்பைகளை வெற்றி பெற்று வரலாறு படைத்தவர். அதில் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு 20 ஓவர்கள் மட்டும் நடைபெற்ற நிலையில், தன் வீரர்களுக்கு எவ்வாறு அவர் நம்பிக்கையை ஏற்படுத்தினார் என்று இஷாந்த் சர்மா சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “மழையால் இறுதிப்போட்டி பாதிக்கப்பட்டபோது மகிபாய் நிதானமாக தெரிந்தார், ஆனால் மைதானத்தில் நிறைய அறிவுரைகளை வழங்க கூடியவர். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது மழை பெய்து கொண்டிருந்தது. மழையால் போட்டி கைவிடப்படும் என்று எல்லோரும் கூறினார்கள், அப்போது ஆட்டம் நடைபெறும், ஆனால் அது குறுகிய ஓவர்கள் வடிவில் கொண்டதாக இருக்கும் என்று கூறினார். மேலும் கடவுள் நம்மை போட்டியில் வெற்றி பெற வைப்பார் என்று நினைக்க வேண்டாம் எனக் கூறுவார்.
கடவுள் எதுவும் செய்ய மாட்டார் நீங்கள் தான் முயற்சி செய்ய வேண்டும், இந்த சமயத்தில் கடவுளை நம்புவதை விட உங்களை நம்ப வேண்டும் என்று கூறுவார். மகிபாய் ஒரு சிறந்த கேப்டன் அவர் சூழ்நிலையை பொறுத்து முடிவுகளை எடுக்க விரும்பினார். ஆனால் அது விராட் கோலி இடம் கிடையாது. அவரிடம் ஒரு அடிப்படைத் திட்டம் இருக்கும் அதை வைத்து போட்டி மாறுவதை வைத்து அதற்குத் தகுந்த முடிவுகளை கோலி எடுப்பார்.
இதையும் படிங்க:இந்திய அணியை வீழ்த்த இந்த திட்டம் தயார்.. அவங்கள யார் வேணா ஜெயிக்கலாம் – பங்களாதேஷ் கோச் சவால்
மகிபாய் எப்போதுமே மீட்டிங் போடுவதில் அதிக கவனம் செலுத்த மாட்டார். அவர் கிரிக்கெட்டை அப்படித்தான் அணுகி விளையாடக்கூடியவர். அவரது உத்தி எளிமையானது, நீங்கள் தவறுகள் செய்தால் மட்டுமே கற்றுக் கொள்வீர்கள், ஆனால் அதே தவறுகளை மீண்டும் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதே முக்கியம் என்று அவர் கூறுவார். அதுதான் உங்களுடைய நிலைத்தன்மை” என்று இஷாந்த் சர்மா பேசியிருக்கிறார். அந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது






