இந்திய அணியை உலகில் எந்த அணியாலும் வீழ்த்த முடியும் என பங்களாதேஷ் அணியின் தலைமை பயிற்சியாளர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த பில் சிம்மன்ஸ் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றில் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் தங்களது முதல் போட்டியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு நல்ல பிரகாசமான வாய்ப்பில் இருக்கின்றன. எனவே நாளை இரு அணிகளும் மோதிக்கொள்ள இருப்பதால் போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மிகப்பெரிய தன்னம்பிக்கை
தற்போது இந்திய அணியின் விளையாடி வரும் விதத்தில் மிகப்பெரிய தன்னம்பிக்கையுடன் இருக்கிறது. குறிப்பாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா பவர் பிளேவிலேயே இந்திய அணியின் பக்கமாக ஆட்டத்தை திருப்பி விடுகிறார். மேலும் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
அதே நேரத்தில் பங்களாதேஷ் அணி புதிதாக உருவாக்கப்பட்டு தொடக்க ஆட்டக்காரர் சைப் ஹஸன் அதிரடியாக விளையாடுகிறார். மேலும் கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தவ்ஹீத் ஹ்ரிடாய் நல்ல பேட்டிங் போனில் இருக்கிறார்கள். பந்து வீச்சிலும் சிறப்பான ஐந்து முழுமையான பவுலர்கள் இருப்பது பலமாக அமைந்திருக்கிறது.
பங்களாதேஷ் பயிற்சியாளர் சவால்
இந்த போட்டி குறித்து பங்களாதேஷ் பயிற்சியாளர் பேசும் பொழுது “ஒவ்வொரு அணிக்கும் இந்தியாவை வீழ்த்தும் திறன் இருக்கிறது. ஆட்டம் அந்தந்த நாளில் தீர்மானிக்கப்படுகிறது. இந்தியா இதற்கு முன்பு என்ன செய்தது என்பது முக்கியம் கிடையாது. போட்டி நடைபெறும் அந்த 4 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம். எங்களால் முடிந்தவரை சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். இந்தியாவின் விளையாட்டு திட்டத்தில் தவறை செய்ய வைப்பது தான் எங்கள் திட்டம். போட்டிகளில் நாங்கள் அப்படித்தான் வெற்றி பெறுகிறோம்”
இதையும் படிங்க : இந்திய அணி நம்பர் 1 ஆக இருக்கட்டும்.. இந்த திட்டத்தை யூஸ் பண்ணி நாங்க கண்டிப்பா ஜெயிப்போம் – வங்கதேச கோச்
“ஒவ்வொரு ஆட்டத்திற்கும் பரபரப்பு நிச்சயம் இருக்கும். இந்தியா டி20 கிரிக்கெட்டில் முதல் இடத்தில் இருக்கின்ற காரணத்தினால் பரபரப்பு அதிகமாகவே இருக்கும். இந்த பரபரப்பை ரசித்து விளையாடுவோம். மேலும் எங்களால் முடிந்தவரை கவனம் செலுத்தி விளையாடி வெற்றி பெறுவோம்” என்று கூறியிருக்கிறார்.






