நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் 47 பந்தில் 70 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த போட்டியில் தனது பேட்டிங் எப்படி அமைந்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டிக்கு மிகவும் மெதுவான ஆடுகளம் கொடுக்கப்பட்டிருந்தது. எனவே பேட்ஸ்மேன்கள் விரும்பியபடி ஷாட் அடிக்க முடியவில்லை. இந்த நிலையிலும் இஷான் கிஷான் பொறுப்பாக விளையாடி அணியை பிளே ஆப் சுற்றுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.
முடிவு செய்தேன்
இந்த தொடரின் முதல் பாதியில் பேட் கம்மின்ஸ் இல்லாததால் இஷான கிஷான் கேப்டனாக பொறுப்பு ஏற்றுக் கொண்டிருந்தார். அந்த நிலையில் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் சிறப்பாக விளையாடியிருந்தார். இந்த நிலையில் தற்போது இரண்டாவது பகுதியிலும் ஒரு கேப்டன் போலவே பொறுப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “நான் சிஎஸ்கே பேட்டிங் செய்யும்பொழுது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருந்தேன். அப்போது ஆடுகளம் மெதுவாக இருப்பது தெரிந்தது. மெதுவான பந்துகள் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களை விளையாடுவதில் கொஞ்சம் பிரச்சனை இருப்பதை பார்த்தேன். எனவே நான் எப்படி விளையாட வேண்டும் என்பதை அங்கேயே முடிவு செய்துவிட்டேன்”
இது சகோதரிக்காக…
” இப்படியான ஆடுகளங்களில் நம்மால் எவ்வளவு ஓவர்கள் விளையாட முடியுமோ அவ்வளவு ஓவர்கள் விளையாட வேண்டும். மேலும் நம் குறித்து நாம் மிகவும் நம்பிக்கை உடன் இருக்க வேண்டும். நான் எந்த இடத்திலும் என்னை சந்தேகப்படவில்லை. இங்கு புதிய பேட்ஸ்மேன்கள் வந்து சிங்கிள் எடுப்பது கூட கடினமானது. எனவேதான் முடிந்தவரை விளையாட முடிவு செய்தேன்”
இதையும் படிங்க : நாங்க தோத்தாலும் பெருமைப்படுறேன்.. அடுத்த முறை கப் நிச்சயம் எங்களுக்குதான்.. காரணம் இதுதான் – ருதுராஜ் பேச்சு
“சமீபத்தில் எங்கள் உறவினரில் சகோதரி ஒருவர் இறந்துவிட்டார். அவருடைய சகோதரன் இந்த போட்டியை பார்க்க வந்திருந்தார். இவர்கள் எங்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவர்கள். எனவே நான் இவர்களுக்காக இந்த போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று விரும்பினேன். இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.






