நாங்க தோத்தாலும் பெருமைப்படுறேன்.. அடுத்த முறை கப் நிச்சயம் எங்களுக்குதான்.. காரணம் இதுதான் – ருதுராஜ் பேச்சு

0
107
Ruturaj

நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி மெதுவான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடி 180 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து போட்டியை வென்று விடும் என்று எதிர்பார்த்த நிலையில், ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷான் மற்றும் கிளாசன் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

பெருமைப்படுகிறேன்

மேலும் இந்த போட்டியில் தோல்வியடைந்த காரணத்தினால் ஏறக்குறைய ப்ளே ஆப் வாய்ப்பை முற்றிலுமாகவே சிஎஸ்கே இழந்துவிட்டது. அதே சமயத்தில் தற்போது 14 புள்ளிகள் உடன் முடிப்பதற்கு வாய்ப்புகளுடன் இருக்கிறது. வீரர்களின் காயத்திற்கு நடுவே சிஎஸ்கே இந்த அளவிற்கு செயல்பட்டது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து கேப்டன் ருதுராஜ் பேசும்போது “உண்மையில் இந்த போட்டி மிகவும் சிறந்ததாக இருந்தது. கடைசி இரண்டு ஓவர்களுக்கு முன்பு வரை கூட போட்டி கைகளில் இருந்தது. இந்த ஆடுகளம் டி20 கிரிக்கெட் ஏற்றதாக இருந்தது. கடைசி வரை ஆடுகளத்தில் பெரிய மாறுதல் எதுவும் இல்லை. எங்கள் வீரர்களும் கடைசி வரையில் சிறப்பாகவே போராடினார்கள். நான் எங்கள் அணியை குறித்து பெருமையைப் படுகிறேன்”

- Advertisement -

சிறப்பாகவே செய்துள்ளோம்

“இந்த போட்டியில் நாங்கள் ஒரு இடத்தில் சிறப்பாக இன்னும் இருந்திருக்கலாம். அது என்னவென்றால் ஒரு விக்கெட்டை வீழ்த்திய பின்னால் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். எங்களால் அது முடியாமல் போய்விட்டது. அதே சமயத்தில் எங்களிடம் இருந்த சிறிய அளவிலான அணியை வைத்துக்கொண்டு நாங்கள் இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருப்பது சிறப்பான விஷயம்”

இதையும் படிங்க : முதல் இன்னிங்ஸில் இருந்து.. சிஎஸ்கே பவுலர்கள் இதை யாருமே கத்துக்கல.. அதான் தோல்விக்கு காரணம்.. இந்திய முன்னாள் வீரர்

“நாங்கள் நிச்சயமாக அடுத்த வருடம் மிகவும் சிறப்பாக வருவோம். சஞ்சுவை அணியில் சேர்த்தது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் சிறப்பாக விளையாடுகிறார். மேலும் கார்த்திக் சர்மா சிறப்பாக இருக்கிறார். வீரர்களின் காயத்திற்கு நடுவே நாங்கள் சிறப்பாக வந்திருக்கிறோம். அடுத்த முறை எல்லோரும் இணையும் போது நாங்கள் இன்னும் வலிமையாக இருப்போம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -