சூரியகுமார் – இஷான் கிஷன் அதிரடி; பஞ்சாப் பவுலர்கள் திணறல்.. மும்பை அணி அபார வெற்றி!

0
3452

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 18.5 ஓவர்களில் 215 ரன்கள் இலக்கை கடந்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி மொகாலியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

பேட்டிங் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் மற்றும் தவான் இருவரும் ஓப்பனிங் செய்தனர். பிரப்சிமரன் 9 ரன்கள், தவான் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க அடுத்து வந்த மேத்யூ ஷாட் 26 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

11.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு ஜோடி சேர்ந்த லிவிங்ஸ்டன் மற்றும் ஜித்தேஷ் சர்மா இருவரும் நான்காவது விக்கெட் இருக்கு வெறும் 53 பந்துகளில் 119 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் 200 ரன்களைக் கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.

கடந்த போட்டியில் 213 ரன்கள் இலக்கை சேஸ் செய்த நம்பிக்கையுடன் இந்த போட்டியில் 214 ரன்கள் இலக்கை சேஸ் செய்வதற்கு களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, ரோகித் சர்மா 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

அடுத்து உள்ளே வந்த கேமரூன் கிரீன் 18 பந்துகளில் 23 ரன்கள் அடித்து நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் இசான் கிஷன் இருவரும் ஆட்டத்தை அப்படியே பஞ்சாப் கிங்ஸ் அணியிடமிருந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கம் திருப்பினர்.

இரண்டு சிக்ஸர்கள் மற்றும் எட்டு பவுண்டரிகள் உட்பட 31 பந்துகளில் 66 ரன்கள் விளாசி நாதன் எல்லிஸ் பந்தில் அவுட் ஆனார் சூர்யகுமார் யாதவ். ஓபனிங் இறங்கி அதிரடியில் கலக்கிய இஷான் கிஷன் 41 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் ஏழு பவுண்டரிகள் உட்பட 75 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

இஷான் கிஷன் – சூர்யா குமார் யாதவ் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் குவித்தது. அடுத்து உள்ளே வந்த டிம் டேவிட் 10 பந்துகளில் 19 ரன்கள், திலக் வர்மா 10 பந்துகளில் 26 ரன்கள் அடிக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் இலக்கை கடந்து ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.