271 ரன்.. இஷான் கிஷான் ருத்ர தாண்டவ சதம்.. சாதித்த சூரியகுமார் யாதவ்.. இந்திய அணி அனுப்பிய செய்தி

0
3
Ishan

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இஷான் கிஷான் தனது முதல் சர்வதேச டி20 சதத்தை அடித்தார். கேப்டனாக சூரியகுமார் யாதவின் ஒரு சாதனையுடன் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்து இருக்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. மேலும் இந்திய அணிக்கு கடந்த போட்டியில் விளையாடாத முன்னணி நட்சத்திர வீரர்கள் அனைவரும் இந்த போட்டிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

- Advertisement -

இஷான் கிஷான் சதம்

இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களில் சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஏமாற்றம் தந்து ஆட்டம் இழந்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டிக்கு அணிக்கு திரும்பி இருந்த இஷான் கிஷான் மூன்றாவது இடத்தில் வந்து அதிரடியில் மிரட்டினார். மொத்தம் 42 பந்துகளை சந்தித்த அவர் அதிரடியாக சதம் அடித்தார். இறுதியாக அவர் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 103 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவரே துவக்க ஆட்டக்காரராக வருவார் என்று தெரிகிறது.

- Advertisement -

சூரியகுமார் சாதனை

இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்தில் அரைசதம் அடித்து 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க : 198 ரன்.. வேற மாதிரி ஆடியோ பாகிஸ்தான் தொடரை வென்றது.. ஆஸி பரிதாப தோல்வி.. ரசிகர்கள் ஆச்சரியம்

ஒரு டி20 தொடரில் இந்திய கேப்டனாக விராட் கோலி அதிகபட்சம் 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 231 ரன்கள் எடுத்திருந்தார். சூரியகுமார் யாதவ் இதை முறியடித்து இந்த தொடரில் 242 ரன்கள் எடுத்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தது.

- Advertisement -