175 ரன்.. கம்பீர் சாதனையை அவர் கண் முன்னால் உடைத்த இஷான் கிஷான்.. இந்தியா ரன் குவிப்பு

0
13

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருக்கிறது.

தற்போது இந்த போட்டி இலங்கை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆடுகளம் சுழல் பந்துவீச்சு க்கு சாதகமாகவும், மைதானம் பெரியதாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இஷான் கிஷான் அதிரடி

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அதேசமயத்தில் ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் 27 பந்தில் அரை சதம் அடித்து 40 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.

மேலும் டி20 உலக கோப்பையில் ஒரு போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் கம்பீரை தாண்டினார். கம்பீர் 75 ரன்கள் எடுத்திருந்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் விராட் கோலி 82 ரன்கள் உடன் இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ரன் குவிப்பு

இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 29 பந்துகளில் 32 ரன்கள், திலக் வருமா 24 பந்துகளில் 25 ரன்கள், சிவம் துபே 17 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள். ஹர்திக் பாண்டியா கோல்டன் டக் ஆனது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் டாஸ் ஜெயித்து தப்பான முடிவு எடுத்துட்டாங்க.. நாங்க பேட்டிங் செய்யவே விரும்பினோம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் சையும் ஆயுப் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த மைதானத்தில் இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதுமானது என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -