இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியை இஷான் கிஷான் சதத்துடன் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடிய இஷான் கிஷான் சதம் அடித்து 43 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். அடுத்து விளையாடிய நியூசிலாந்து 225 ரன்கள் எடுத்தது. இறுதியாக இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்படித்தான் ஆடினேன்
இதுகுறித்து இஷான் கிஷான் கூறும்பொழுது “என்னுடைய இன்னிங்ஸ் குறித்து நான் எதுவும் பெரிதாக நினைக்கவில்லை. பந்து ஆரம்பத்தில் கொஞ்சம் அசைந்தது போல இருந்தது. அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்த விளையாடும் பொழுது அவருடைய இன்டெண்ட்டை பார்த்தால் தற்போது அணிக்கு என்ன வேகம் வேண்டும் என்பது நமக்கு தெரியும். பிறகு நான் பந்தை கவனித்து அதற்கு ஏற்ற வகையில் விளையாடினேன். இந்த அணுகுமுறை எனக்கு இன்று நன்றாக வேலை செய்தது”
“இப்போது அணியில் அனைவருக்கும் ஒரே மாதிரியான மைண்ட் செட்தான் இருக்கிறது. அது நீங்கள் ஒரு சாதனைக்கு பக்கத்தில் இருந்தாலும் அதற்காக சிங்கிள் எடுத்து பொறுமையாக விளையாட கூடாது. பிறகு நீங்கள் அடிக்க வேண்டிய பந்தை அடிக்காமல் விட்டு விட்டதாக நினைக்கத் தோன்றும். பந்து அடிக்கக்கூடிய இடத்தில் இருந்தால் அடிக்க வேண்டும். கவனம் முழுக்க வெற்றியில்தான் இருக்கிறது தனிப்பட்ட சாதனையில் கிடையாது”
எனக்கு இதுவே முக்கியம்
“நான் இன்னும் உச்சநிலையை அடையவில்லை என்று நினைக்கிறேன். எனக்கு ரன்கள் வருகிறது அவார்டு கிடைக்கிறது. ஆனால் என்னுடைய கவனம் முழுக்க உலகக்கோப்பை மீதுதான் இருக்கிறது. அங்கு தான் இன்னும் கூடுதல் முயற்சியை வெளிப்படுத்த வேண்டும். இந்தப் பார்மை அப்படியே எடுத்துக் கொண்டு உலக கோப்பைக்கு செல்ல வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : 271 ரன்.. இஷான் கிஷான் ருத்ர தாண்டவ சதம்.. சாதித்த சூரியகுமார் யாதவ்.. இந்திய அணி அனுப்பிய செய்தி
தற்போது சஞ்சு சாம்சன் இடத்தில் இஷான் கிஷான் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார் என்று தெரிகிறது. இந்த சதத்தின் மூலம் உலகக் கோப்பை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு உறுதியாகி இருக்கிறது.






