ஆர்சிபியை பார்த்தாலே அடிக்கிற சக்தி வந்துடுது.. நான் முதிர்ச்சியாகல ஆனா இது நடந்திருக்கு – இஷான் கிஷான் பேட்டி

0
490
Ishan

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 46 பந்தில் 79 ரன்கள் குவித்த இஷான் கிஷான் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இந்த போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவருக்கு இது மூன்றாவது ஆட்டநாயகன் விருது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆர்சிபி அணிக்கு எதிராக அவர் எல்லா நேரங்களிலும் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

- Advertisement -

புதிய வளர்ச்சி

இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷான் கேப்டனாக இருந்து சிறப்பான முறையில் வழிநடத்தி இருந்தார். மேலும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் இந்த தொடர் முழுக்க அவர் சிறப்பாக விளையாடி வந்திருக்கிறார். இதன் காரணமாக இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் தவிர்க்க முடியாத விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக மாறி உள்ளார்.

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் போலவே 18 புள்ளிகள் எடுத்து இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. நேற்றைய போட்டியில் 252 எடுத்த போதிலும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் ரன் ரேட் கிடைக்கவில்லை.

- Advertisement -

முதிர்ச்சி அடைந்து விட்டீர்களா?

இதுகுறித்து இஷான் கிஷான் பேசும்போது “இந்த ஐபிஎல் தொடரில் எனக்கு இது மூன்றாவது ஆட்டநாயகன் விருது. ஆர்சிபி அணிக்கு எதிராக நான் சிறப்பாக தொடர்ந்து விளையாடுவது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த அணி என்றாலே எனக்கு ஒரு கூடுதல் உற்சாகம் வந்து விடுகிறது. பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் நான் ஒவ்வொரு போட்டியாகத்தான் எடுத்துக் கொள்கிறேன்”

இதையும் படிங்க : பவுலிங்ல நான் கத்து கொடுக்கல.. இந்த ரெண்டு பசங்க கிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன்.. இது என் கனவு டீம் – கம்மின்ஸ் பேச்சு

“நான் முதிர்ச்சி அடைந்து விட்டேனா என்றால் இது அதைப் பற்றி எது கிடையாது. என்னுடைய ஷாட் செலக்சன் பற்றியது. நான் சரியான பந்தை தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் அடிக்க வேண்டும். மேலும் நான் எந்த பவுலரை தாக்க வேண்டும் என்பதும் முக்கியமானது. நான் இந்த விஷயத்தில் தான் முன்னேறி வந்துள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -