வெளியானது புதிய ஐசிசி டி20ஐ தரவரிசைப் பட்டியல் – 67 இடங்கள் முன்னேறி டாப் 10க்குள் நுழைந்த இஷான் கிஷன் ; விராட் கோலி & ரோஹித் சர்மாவின் இடம் இதுதான்

0
298
Rohit Sharma Virat Kohli and Ishan Kishan

இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி20 தொடரில் இந்திய வீரர்கள் மத்தியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தொடரில் அதிக ரன்கள் குவித்து இஷான் கிஷன் மிக அற்புதமாக விளையாடி வருகிறார். மூன்று போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் உட்பட மொத்தமாக இதுவரை 164 ரன்கள் குவித்துள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்திற்கு கிடைத்த பரிசாக இன்று வெளியாகியுள்ள ஐசிசி டி20 தரவரிசை புள்ளி பட்டியலில் அறுபத்தி எட்டு இடங்களை தாண்டி முன்னேறியுள்ளார்.

டாப் டென்னில் நுழைந்த இஷான் கிஷன்

68 இடங்கள் முன்னேறி தற்போது ஏழாவது இடத்தை அவர் பிடித்திருக்கிறார்.689 புள்ளிகளுடன் தற்போது அவர் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டாப் 10 வீரர்கள் மத்தியில் இருக்கும் ஒரே இந்திய வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பர் ஒன் இடத்தில் தற்பொழுதும் பாபர் அசாம் 818 புள்ளிகளுடன் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் இருந்த நிலையில் அவரை பின்னுக்கு தள்ளி தற்போது முஹம்மது ரிஸ்வான்(794 புள்ளிகள்) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறிய ஜோஷ் ஹேசில்வுட்

2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை டி20 போட்டியில் விளையாடாத அவர் தற்பொழுது கடந்த இரண்டு ஆண்டுகளாக மிக சிறப்பாக விளையாடி வருகிறார். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரில் இவர் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.792 புள்ளிகளைப் பெற்று நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளர் இடத்தை அடைந்துள்ளார்.ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் இதற்குமுன் 2008ஆம் ஆண்டு நாதன் பிராக்கன் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் புவனேஸ்வர் குமார் 3 இடங்கள் முன்னேறி 11வது இடத்தைப் பிடித்திருக்கிறார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் டி20 தொடரில் அவர் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் மூன்று இடங்கள் முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர் விபரம்

ஆல்ரவுண்டர் வீரர்கள் மத்தியில் நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் வீரராக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமது நபி இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் மேக்ஸ்வெல் 2 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணிகளை பொறுத்தவரையில் இந்திய அணி நம்பர் ஒன் டி20 அணியாக முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியும் 3வது இடத்தில் பாகிஸ்தான் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.