இந்த மும்பை வீரர் 15 கோடிக்கு தகுதியானவர் கிடையாது – ஷேன் வாட்சன் அதிரடி

0
473
Shane Watson about Ishan Kishan

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனுக்காக மெகா ஏலத்தில் ஹைதராபாத் அணி முக்கிய வீரர்களுக்கு பெரிதாய் கையை உயர்த்தாமல் அமைதியாக இருக்க, சென்னை அணியும், மும்பை அணியும் தீபக் சாஹர், இஷான் கிஷனுக்காகக் காத்திருந்து, இருவரின் மேலும் தலா 15 கோடியைச் செலவழித்து இரு அணிகளும் வாங்கினர்.

ஆனால் காயத்தால் இந்தத் தொடரிலிருந்து தீபக் சாஹர் வெளியேறி சென்னை அணிக்கு அதிர்ச்சியளிக்க, இஷான் கிஷன் ஒரு ஆட்டத்தில் ஆடி, மற்ற ஆட்டங்களில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

- Advertisement -

எந்த அணியின் இரசிகர்களும் எதிர்பார்க்காத வகையில் இந்தத் தொடரில் மும்பை அணி, முதல் ஐந்து ஆட்டங்களைத் தோற்று, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. சூர்யா, திலக், ப்ரீவிஷ் போன்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும், பந்து வீச்சில் பும்ரா தவிர ஒருவரும் நல்ல முறையில் வீசவில்லை.

மும்பை அணியின் இந்த நிலைக்குறித்து கருத்துப் பகிர்ந்துள்ள ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் “மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசியில் இருப்பது, எனக்கு எந்தவகையிலும் அதிர்ச்சியாகவோ ஆச்சரியமாகவோ இல்லை. இஷான் கிஷன் திறமையான வீரர்தான். ஆனால் அவர்மேல் அவ்வளவு பணம் செலவழிக்கும் அளவுக்கு கிடையாது. அடுத்து ஆர்ச்சருக்குச் செலவழித்தது. அவர் ரொம்ப நாளாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார். அடுத்த தொடரிலும் ஆடுவாரா என்றும் தெரியவில்லை. இப்படி மும்பை அணியில் ஓட்டைகள் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்!