நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இசான் கிஷான் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் போல செயல்பட விருப்பமில்லை என அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி உடன் நடைபெற்ற ஒரு உரையாடலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்து இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிகள் இருந்து கழட்டிவிடப்பட்ட பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்து முதல் போட்டியிலேயே அதிரடி சதம் அடித்து அசத்தி இருக்கிறார்.
நீங்கள் இப்படி நடக்க காரணம் என்ன?
இந்த நிலையில் இஷான் கிஷான் மற்றும் அனில் சவுத்ரி இருவரும் கலந்து கொண்ட உரையாடலில் அவர் ஒரு விக்கெட் கீப்பராக ஸ்டெம்புகளுக்கு பின்னால் நடுவர்களிடம் அடிக்கடி அவுட் கேட்பதில்லை என்றும் ஏன் இவ்வாறு முதிர்ச்சியாக நடந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பதற்கான கேள்வி முன் வைக்கப்பட்டு அதை ஒட்டி உரையாடல் நடைபெற்றது.
இது குறித்து அனில் சவுத்ரி கேட்ட பொழுது ” நீங்கள் இப்போது வளர்ந்து நல்ல முறையில் முதிர்ச்சி அடைந்து விட்டீர்கள். தேவைப்படும் பொழுது மட்டுமே நடுவரிடம் அவுட் கேட்கிறீர்கள். முன்பு எல்லாவற்றுக்குமே நீங்கள் அவுட் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். தற்போது திடீரென எப்படி இவ்வளவு முதிர்ச்சியாக நடக்க ஆரம்பித்து இருக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
முகமது ரிஸ்வான் போல் நடக்க விரும்பவில்லை
இதுகுறித்து பதில் அளித்த இஷான் கிஷான் பேசும்பொழுது “தற்போது நடுவர்கள் புத்திசாலியாகி விட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் ஒவ்வொரு முறையும் அவுட் கேட்டுக் கொண்டே இருந்தால், உண்மையில் அவுட் இருக்கும் பொழுதும் அவர்கள் தர மாட்டார்கள். எனவே நமக்கு எப்பொழுது அவுட் என்று மிக உறுதியாக தெரிகிறதோ அப்பொழுது மட்டுமே கேட்க வேண்டும். அப்படி செய்தால் அவர்களுக்கும் நாம் கேட்பதில் நம்பிக்கை இருக்கும்”
இதையும் படிங்க : சன்ரைசர்ஸ் கஷ்டமான அணிதான்.. ஆனா அவர்களை வீழ்த்த இந்த திட்டம் ரெடியா இருக்கு – மிச்சல் மார்ஸ் பேட்டி
“இந்த விஷயத்தில் நான் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் போல நடந்து கொள்ள விரும்பவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் மிக உற்சாகமாக அவுட் கேட்டுக் கொண்டே இருப்பார். பிறகு நான் அவரைப்போல நடந்து கொண்டால் நீங்கள் நான் கேட்கும் எதற்கும் அவுட் கொடுக்க மாட்டீர்கள்” என்று நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார்.






