இன்று நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் மயங்க் யாதவ் இடையே சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் நட்சத்திர அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் காயத்தின் காரணமாக ஆரம்பத்தில் விளையாடவில்லை. நிலையில் முதல் முறையாக இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடேவில் களமிறங்கினார்.
இரு அணிகளிலும் மாற்றங்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. லக்னோ அணியில் இன்று டேவிட் மில்லர் இம்பேக்ட் பிளேயராக வைக்கப்பட்டார். ஆயுஸ் பதோனி நேரடியாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். மேலும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் கொண்டுவரப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் மிட்சல் சான்ட்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருடைய இடத்திற்கு தென்ஆப்பிரிக்க வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கார்பின் போஸ் விளையாடுகிறார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் ஸ்பின்னராக கரண் சர்மா நேரடியாக இடம் பெற்று இருக்கிறார்.
மயங்க் யாதவ் – ரோகித் சர்மா சம்பவம்
இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கிய மயங்க் யாதவ் முதல் ஓவரை வீசி ஆறு ரன்கள் கொடுத்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் மூன்றாவது ஓவரை பேச வந்தார். மேலும் முதல் இரண்டு ஓவர்களை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரியான் ரிக்கல்டன் எதிர்கொண்டு இருந்தார். இதனால் ரோஹித் சர்மாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மயங்க் யாதவ் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை ஷார்ட் பந்தாக வீச, அதை ரோகித் சர்மா சிக்ஸருக்கு அடித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் மயங்க் யாதவ் ஷாட் பந்தை வீச அதையும் ரோகித் சர்மா சிக்ஸருக்கு அடித்தார். என்கிட்ட உன் வேகம் பலிக்காது என்பது போல ரோகித் சர்மா பேட்டிங் இருந்தது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025..சிஎஸ்கேவிலிருந்து 3 வீரர்கள் வெளியேற்றப்பட வாய்ப்பு.. நேராக களத்தில் குதிக்கும் தோனி
இதற்கு அடுத்து மயங்க் யாதவ் அடுத்த பந்தை கொஞ்சம் மேலே வீச ரோகித் சர்மா ரன் எடுக்கவில்லை. அடுத்து மயங்க் யாதவ் வேகமாக வந்து பந்தை மெதுவாக வீச ஏமாந்த ரோகித் சர்மா கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இது அண்ணா எனக்கு வேகமாக மட்டுமில்லை மெதுவாகவும் புத்திசாலித்தனமாக வீச தெரியும் என மயங்க் யாதவ் சொன்னது போலவே இருந்தது. இருவருக்கும் இடையே நான்கு பந்துகள் மட்டுமே இருந்திருந்தாலும், ஆனால் நடுவில் நடந்த சம்பவம் சுவாரசியமாக ரசிகர்களுக்கு அமைந்தது.






