ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நினைத்த மாதிரி சிறப்பாக செயல்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. இதனால் தொடர்ந்து இரண்டாவது முறையாக பிளே ஆப் வாய்ப்பைத் தவறவிடும் சூழல் சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த சீசனுக்கு அணியை கட்டமைக்கும் பணிகள் சிஎஸ்கே அணி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு எஞ்சி இருக்கும் ஐந்து போட்டிகளில் வாய்ப்பு வழங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முடிவெடுத்து இருக்கிறது.
அந்த வகையில் சிஎஸ்கே அணி தற்போது எடுத்திருக்கும் சில வீரர்கள் சோபிக்கவில்லை.
3 வீரர்கள் நீக்கப்பட வாய்ப்பு:
இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் நம்பி ஏமாந்து விட்டது. இந்த வீரர்களை வெளியே அனுப்பும் பணி தீவிரமடைந்து இருக்கிறது. ஐபிஎல் 2026 ஆம் ஆண்டுக்கான மினி ஏலத்தில் ஐந்து வீரர்களை சிஎஸ்கே அணி வெளியே அனுப்பப்பட இருக்கிறது. அது யார் என்று தற்போது பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் ராகுல் திரிப்பாதி. ராகுல் திரிப்பாதி அதிரடியாக விளையாட கூடிய வீரர் என்ற நம்பிக்கையில் தான் சிஎஸ்கே அணி அவரை எடுத்தது. ஆனால் தமக்கு கிரிக்கெட்டே விளையாட தெரியாது என்பது போல் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு சீசனில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் வெறும் 55 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 23 ரன்கள் ஆகும்.
விஜய் சங்கர் நீக்கம்:
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க போறவர் தீபக் ஹூடா. சிஎஸ்கே அணிக்காக நடப்பு சீசனில் 4 போட்டிகளில் விளையாடிய தீபக் ஹூடா, மொத்தமாகவே 29 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 22 ரன்கள் ஆகும் என்ற அளவில் மோசமான வகையில் இருக்கிறது.
இதையும் படிங்க: என் பார்ட்னர் ரகானே ஒத்த ஆளு.. மொத்த கேகேஆர் டீமையும் முடிச்சிட்டாரு.. காரணம் இதான் – புஜாரா பேச்சு
இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பவர் விஜய் சங்கர். விஜய் சங்கர் நடப்பு சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி மொத்தமாக 118 எண்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 69 ரன்கள் ஆகும். விஜய் சங்கரின் ஸ்டிரைக் ரேட் 129 என்ற அளவில் இருக்கிறது. மேலும் அவருடைய பேட்டிங்கும் நம்பிக்கை தரும் வகையில் இல்லை என்பதால் சிஎஸ்கே இந்த முடிவை எடுத்திருக்கிறது.






