“விராட் கோலி ஸ்மித்துக்கு இது கடைசி உலக கோப்பையா?” – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நேரடியான பதில்!

0
223
Virat

இன்று உலக கிரிக்கெட்டில் ஒப்பிட முடியாத இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருந்து வருகிறார்.

அவரோடு சேர்த்து கூறப்படும் கேன் வில்லியம்சன், ஸ்மித், ஜோ ரூட் யாரும் மூன்று வடிவங்களில் மிகச்சிறப்பான தாக்கத்தை உருவாக்க அளவில் விளையாடுவதில்லை.

- Advertisement -

இதில் விராட் கோலி மட்டுமே மூன்று வடிவத்திலும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விளையாடக் கூடியவர். உதாரணமாக கடைசி டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக காட்டியிருப்பார். மற்றவர்களிடம் டி20 கிரிக்கெட்டில் இப்படியான ஒரு ஆட்டத்தை பார்க்க முடியாது.

மேலும் விராட் கோலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தாலும் கூட அவர் ஒரு பினிஷராக இறுதிவரை ஆட்டத்தை எடுத்துச் சென்று முடிக்க கூடியவராகவே இதுநாள் வரையில் இருந்து வந்திருக்கிறார்.

- Advertisement -

இதைத் தவிர்த்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் வடிவம் என்று பார்த்தால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித் மிகச் சிறப்பானவராக இருந்து வருகிறார். இவர்கள் இருவருக்குமே தற்பொழுது 34 வயதாகிறது.

எனவே இவர்கள் இன்னும் நான்கு வருடங்கள் கழித்து நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்கின்ற கேள்வி ஒருபுறம் போய்க்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “விராட் கோலி, ஸ்மித் இடம் நாம் ஓய்வு போன்ற ஒரு விஷயத்தை எப்பொழுதும் பேசவே கூடாது. ஏனென்றால் அவர்கள் பேட்டிங்கை விரும்பக் கூடியவர்கள். மேலும் பேட்டிங்கில் ஒரு மட்டத்தில் விளையாடுவதற்கு அவர்கள் எப்பொழுதும் மிகக் கடினமாக பயிற்சி செய்யக் கூடியவர்கள்.

விராட் கோலிக்கு 50 ஓவர் கிரிக்கெட் வடிவம் மிகவும் பொருத்தமானது. ஸ்மித்துக்கும் பொருத்தமானது. ஆனால் அவர் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு பொருத்தமானவராக இல்லை.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியை பொருத்தவரையில் நடுவில் விளையாடி ரன் கொண்டு வருவது ஆட்டத்தின் மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். இதுதான் சுவாரசியமானதும் ஆகும். இந்த இடத்தில் தான் விராட் கோலி மற்றும் ஸ்மித் இருவரும் அணிக்கு விலைமதிப்பு இல்லாதவர்களாக மாறுகிறார்கள்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -