பாகிஸ்தான் கிரிக்கெட் அழிகிறதா? – 2023 உலக கோப்பை இந்தியா மேட்ச் பற்றி முதல் முறையாக பாபர் ஆஸம் பேச்சு!

0
1033
Babarazam

இந்தியாவில் முதல் முறை முழுமையாக இந்த ஆண்டு அக்டோபர் நவம்பரில் நடக்க இருக்கின்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வந்து சேர்வது இன்னும் நூறு சதவீதம் உறுதியாகவில்லை.

2016 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவை இந்தியாவில் சந்தித்தது கிடையாது. இந்த இரு அணிகளும் மோதும் சாதாரண ஆட்டங்களுக்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். இந்த நிலையில் இந்தியாவில் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டி நடக்கிறது அதுவும் ஒரு உலகக்கோப்பை போட்டி எனும் பொழுது எதிர்பார்ப்புகள் மிக அதிக அளவில் இருக்கின்றது.

- Advertisement -

தற்பொழுது பாதுகாப்பு வசதிகள் இந்தியாவில் தங்கள் அணிக்கு எப்படி இருக்கிறது என்று பாகிஸ்தான் ஆராய்ந்து வருவதாகவும், அது திருப்தியாக இருக்கும் பொழுது முடிவில் பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு அனுமதி தரப்படும் என்றும் கூறப்படுகிறது.

பாபர் ஆஸம் ஹஜ் பயணம் முடித்து நாடு திரும்பி இருக்கிறார். மேலும் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு பாகிஸ்தான் அணி தற்பொழுது தயாராகி வருகிறது. இந்த நிலையில் உலகக் கோப்பை குறித்து முதல்முறையாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கலந்து கொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

- Advertisement -

அவரிடம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை குறித்தும் இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் மோசமான நிலையில் இருந்து அழிந்து வருகிறதா என்பது போன்ற கேள்விகளும் முன்வைக்கப்பட்டன.

இதற்கு பதில் அளித்து பேசிய பாபர் ஆஸம் “நான் இப்படி நிறைய கேள்விப்படுகிறேன். நாங்கள் உலக கோப்பையில் விளையாடவே போகிறோம். இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகவில்லை. இந்தியாவைத் தவிர்த்து இருக்கும் மற்ற எல்லா அணிகளையும் வீழ்த்தினால்தான் நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாட முடியும். எங்கள் கவனம் ஒரு அணியின் மீது மட்டுமே கிடையாது. அனைத்து அணிகளுக்கும் எதிராகச் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கான டிக்கெட்டை பெறுவதே எங்கள் நோக்கம்.

எங்கள் எண்ணம் எளிமையானது. கிரிக்கெட் இருந்தால் வெளியில் அதிக ஆட்டங்களும் இருக்கும். நாங்கள் சென்று விளையாடத்தான் வேண்டும். தொழில் முறை வீரராக நீங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். விதவிதமான சூழல்களில் விளையாட வேண்டும். இதைத்தான் சவால்கள் என்கிறோம். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் பாகிஸ்தான் அணியை பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்று வெற்றி பெறுவதே எனது விருப்பம். எனவே எங்கள் மனதில் இதுதான் இருக்கிறது. ஒரு அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட வேண்டும் என்று மட்டும் நாங்கள் நினைக்கவில்லை” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -