கே.எல்.ராகுல் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவரா? – வாசிம் ஜாபர் அதிரடி கருத்து!

0
149
Klrahul

இந்திய அணியின் முன்னாள் துவக்க  ஆட்டக்காரரும்  ‘பஞ்சாப் கிங்ஸ்’  அணியின்  பேட்டிங்  பயிற்சியாளருமான   “வாசிம்  ஜாபர்”  “கே.எல்.ராகுலி”ன்  ‘கேப்டன்ஷிப்’ பற்றி  கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பற்றி விரிவாக பேசியுள்ள  ‘வாசிம் ஜாபர்’  “பங்களாதேஷ் அணி  எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது . இந்திய அணியின் ‘பேட்டிங்’  போது  இறுதிக்கட்டத்தில்  ‘ரோகித் சர்மா’ வந்து அதிரடியாக ஆடியும்  பங்களாதேஷ் அணி  ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  என்று கூறினார.

ஆட்டத்தின் இடையே  காயம் காரணமாக வெளியேறிய கேப்டன் ரோஹித் சர்மா  மருத்துவ பரிசோதனைக்காக  சென்றிருந்த சமயத்தில்  அணியின் துணை கேப்டன்  ‘கே.எல்.ராகுல்’ அணியை வழிநடத்தினார்,இது குறித்து பேசி உள்ள  ‘வாசிம் ஜாபர்’ “கேப்டன் களத்தில் இல்லாத நிலையில்  அணியை வழிநடத்த வேண்டியது  துணை கேப்டனின் பொறுப்பு . அதன் அடிப்படையில்  கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட்ட கே.எல்.ராகுல்  இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்”  என்று தெரிவித்தார் .

இதுகுறித்து மேலும் பேசிய அவர்  “இந்திய  அணியிடம்  ‘முகமது சிராஜ்’ ‘உம்ரான் மாலிக்’    ‘அக்சர்   பட்டேல்’  மற்றும் ‘வாஷிங்டன் சுந்தர்’ என  சிறப்பான பந்துவீச்சாளர்கள் இருந்தும்  பங்களாதேஷ் அணி  69 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்ற நிலையில் இருந்து  271 ரன்களை குவித்தது. இந்தக் கட்டத்தில்  கேப்டன்  சிறப்பாக செயல்பட்டு  பங்களாதேஷ் அணியை  குறைவான இலக்கங்களுக்குள்  கட்டுப்படுத்த  முயற்சி செய்திருக்கலாம்” என்று தெரிவித்தார் .

சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை, கே.எல்.ராகுலுக்கு   கேப்டன்  பொறுப்பு   என்பது  அனுபவம் இல்லாத  ஒன்றுதான் என்றாலும்  அதை ஒரு காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில்  அவர் தனது  தவறுகளை சரி செய்து கொண்டு  அணியை சிறப்பாக வழி நடத்துவார்  என்று எதிர்பார்க்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான  மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி  நாளை மறுநாள்  நடைபெறவிருக்கிறது. அந்தப் போட்டியில் ஆவது  இந்திய அணி வெற்றி பெறுமா? என்று  இந்திய ரசிகர்கள்  ஆவலுடன் எதிர்நோக்கி  காத்திருக்கின்றனர் .