ஹை ஸ்கொர் பிட்ச்ன்னு பில்டப் கொடுத்த கேஎல் ராகுல்.. முதலில் பேட்டிங் எடுத்து வசமாக சிக்கிய ஹைதராபாத்! பிட்ச் எப்படின்னு எனக்கு முன்னாடியே தெரியும் – கேஎல் ராகுல் பேட்டி!

0
227

பவர்-பிளே ஓவர்களில் ஸ்பின்னர்களை கொண்டுவர என்ன காரணம்? அதிக ஸ்கோர் அடிக்கக்கூடிய பிட்ச் என்று கூறிவந்து, இப்படி மோசமான பிட்ச்சில் ஆட்டம் முடிந்தது எப்படி? என்பது குறித்து பேட்டியளித்துள்ளார் கேஎல் ராகுல்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இந்த சீசனின் பத்தாவது லீக் போட்டியில் விளையாடின. கடந்த போட்டியின்போது இந்த மைதானத்தில் லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 193 ரன்கள் வரை அடித்தது.

- Advertisement -

ஆகையால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிக இலக்கை செட் செய்வதற்கு, டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்த முடிவே ஹைதராபாத் அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஏனெனில் முதலில் பேட்டிங் செய்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் வெறும் 121 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த எளிய இலக்கை துரத்தி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில், மீதம் நான்கு ஓவர்கள் இருக்கையில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

போட்டி முடிந்த பிறகு, டாஸ் போடப்பட்டபோது இந்த பிட்ச் பேட்டிங் செய்ய நன்றாக இருக்கும் என்பதுபோலவே பில்டப் கொடுத்தது எதற்காக? இது ஏமாற்று வேலையா? என்று கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பினார் ஹர்ஷா போகலே. அதற்கு பதில் கொடுத்த கேஎல் ராகுல்,

- Advertisement -

“இந்த மைதானம் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு நேற்றே தெரியும். மேலும் 2-3 வாரங்களாக இங்கு பயிற்சி செய்து வருகிறோம். பவர்-பிளே ஓவரில் பந்து ஸ்கிட் ஆனவுடன் ஸ்பின்னர்களை கொண்டு வரவேண்டும் என்று தெரிந்து விட்டது. க்ருனால் பாண்டியாவை உடனடியாக உள்ளே எடுத்து வந்துவிட்டேன் அவர் சிறப்பாக செயல்பட்டு கொடுத்தார்.

வீரர்கள் பயிற்சியின் போது வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தை இங்கும் வெளிப்படுத்தினார்கள். இது கேப்டனாக இருக்கும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. 3 போட்டிகளில் இரண்டு வெற்றியைப்பெற்று நல்ல துவக்கம் கிடைத்திருக்கிறது. இந்த துவக்கத்தை தொடர் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.” என்றார்.

“இந்த மைதானத்தில் இரண்டுவிதமான பிட்ச் இருக்கிறது. இரண்டிற்கும் பழகிக்கொண்டோம். பேட்ஸ்மேனாக, இரண்டிலும் எப்படி அணுகவேண்டும் என்று என்பதையும் உணந்துகொண்டேன்.” என்றார்.