மீண்டும் மும்பை இந்தியன்ஸில் ஹர்திக் பாண்டியா?.. ரோகித் எங்கே?.. வெளியான பரபரப்பு தகவல்கள்!

0
2039
Hardik

தற்பொழுது 17ஆவது ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலத்திற்கு வீரர்களை விடுவிப்பதற்கான கடைசி நாள் நெருங்கி இருக்கிறது.

இதற்குள் இரு அணிகள் விருப்பப்பட்டு வீரர்களை தங்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம். இல்லை தங்களுக்கு வேண்டாத வீரர்களை அணிகள் வெளியேற்றலாம்.

- Advertisement -

இறுதியாக இன்று மொத்தமாக யாரை வாங்குகிறோம் யாரை வெளியேற்றுகிறோம் என்கின்ற மொத்த பட்டியலை ஐபிஎல் குழுவுக்கு அணிகள் கொடுத்தாக வேண்டும்.

மேலும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் மினி ஏலம் நடக்க இருக்கிறது. தேர்தல் காலம் என்பதால் ஐபிஎல் இந்தியாவில் நடத்தப்படுமா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்த நிலையில் இதுவரை ஐபிஎல் மினி ஏல காலத்தில் நடந்திடாத ஒரு பெரிய ஆச்சரியமான சம்பவம் நடக்க இருப்பதாக, இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ வெளியிட்டுள்ள தகவல் ஒன்று கூறுகிறது.

- Advertisement -

குஜராத் அணிக்கு கடந்த இரண்டு வருடத்தில் ஒருமுறை கோப்பையையும், ஒரு முறை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச் சென்ற கேப்டன் ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு வருகிறார் என்கின்ற செய்திதான் அது.

கடந்த சில நாட்களாகவே இணையத்தில் இப்படியான தகவல்கள்வந்து கொண்டிருந்தது. ஆனால் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வராத காரணத்தினால் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நேற்று இஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் தகவல் வந்த காரணத்தினால் இது சூடு பிடித்திருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு வீரர்களை யாரையும் கொடுக்காமல் 15 கோடி ரூபாய் மட்டும் பணமாக கொடுத்து ஹர்திக் பாண்டியாவை வாங்க பேச்சுவார்த்தை முடிந்து இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

மேலும் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை குஜராத் அணிக்கு தருகின்ற யோசனை கிடையாது என்றும் தெளிவாகப் பட்டிருக்கிறது. ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு ஹர்திக் பாண்டியா கேப்டனாக தொடர்வார் என்றும் தெரிகிறது. இன்று முழுவதுமாக இதில் எது உண்மை என்பது தெரிந்து விடும்.