தோனி அம்பதி ராயுடு சிஎஸ்கே அணிக்கு பிளசா மைனசா? – சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹைடன் ஓபன் டாக்!

0
819
Hayden

ஐபிஎல் அணிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த அணி அதிக முறை பிளே ஆப் சுற்றை எட்டியும், அதிக முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தும், நான்கு முறை கோப்பையை வென்றும் சாதனை படைத்திருக்கிறது!

மேலும் ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் ஒரே கேப்டனை கொண்டு அதிக விளையாடிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. மேலும் மற்ற ஐபிஎல் அணிகளுக்கு அணியின் கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமான அணியாக இருக்கிறது. ஒருமுறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வீரர் இன்னொரு அணியில் விளையாட விரும்புவது குறைவு.

- Advertisement -

இப்படிப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மற்ற அணிகளை காட்டிலும் இன்னொரு சிறப்பு அம்சம் இருக்கிறது. பரபரப்பான டி20 கிரிக்கெட் இளைய வீரர்களுக்கானது என்கின்ற ஒரு பரவலான கருத்து இருந்து வந்தது. இப்பொழுதும் கூட அந்தக் கருத்து இருக்கிறது. ஆனால் அதை உடைத்து 30 வயதுக்கு மேற்பட்ட அனுபவ வீரர்களை கொண்டு விளையாடுவது டி20 கிரிக்கெட்டை இன்னும் சுலபமாக்கும் என்கின்ற ரகசியத்தை வெளியிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

இரண்டு ஆண்டு தடைக்காலத்திற்கு பிறகு திரும்பி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் அதிகபட்சம் 30 வயதை தாண்டிய வயதான வீரர்களையே வாங்கி இருந்தது. இதனால் அந்தச் சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாடிஸ் ஆர்மி என்று கேலி செய்யப்பட்டது. ஆனால் அதை எல்லாம் ஒதுக்கி விட்டு அனுபவ வீரர்கள் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி அந்த வருடம் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்கள்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாடிஸ் ஆர்மி என்கிற அணி அமைப்பில் இருந்து வெளிவந்து விட்டதா? இந்த வருட ஐபிஎல் தொடரில் மூத்த வீரர்களான மகேந்திர சிங் தோனி மற்றும் அம்பதி ராயுடு இருவரும் எப்படியான முக்கிய கதாபாத்திரத்தை அணியில் வகிப்பார்கள்? என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள மேத்யூ ஹைடன் ” சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் கொஞ்சம் பழைய டாடிஸ் ஆர்மி அணியாகத்தான் இருக்கிறது. அவர்கள் அந்த டேக் லைனை பெற்றுள்ளார்கள் என்று தோன்றுகிறது. எம் எஸ் தோனி மற்றும் அம்பதி ராயுடு போன்றவர்கள் இருப்பதால் இன்னும் கொஞ்சம் டாடிஸ் ஆர்மி அணியாகத்தான் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே அணியின் முக்கியமான வீரர்களாக இருக்க வேண்டும். இந்த இருவரும் அனுபவத்தால் அணியின் முக்கிய வீரர்களாக இருக்கப் போகிறார்களா அல்லது வெறும் முன்னிற்கும் தலைவர்களாக மட்டும் இருக்கப் போகிறார்களா என்பதில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி உள்ளது! என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் திரும்பி வந்து கோப்பையை வென்றது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அணி இரண்டு வருடங்களாக பிரிந்து இருந்தது. அவர்கள் வெவ்வேறு உரிமையாளர்களின் கீழ் விளையாடினார்கள். ஆனால் அவர்கள் மீண்டும் மிகச் சரியாக திரும்பி வந்தார்கள். இடைவெளிக்குப் பிறகு ஒரு தலைவன் ஒரு அணியை எப்படி இணைக்க முடியும்? என்பதை அது சொல்கிறது. உங்களுக்கு தெரியும் முதல் இரண்டு ஆண்டுகளில் அணிக்குள் ஒரு குழு உணர்வு இருக்கும். ஆனால் பிரிந்து திரும்ப வந்து அணியை இணைப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம்!” என்று கூறி இருக்கிறார்.