நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை குரூப் 4 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்த போட்டியின் போது வெற்றிக்கு காரணமான முக்கிய தருணம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.
இந்த போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. அப்போது இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ஃபர்கான் மற்றும் அயூப் ஜோடி 48 பந்துகளில் 72 ரன்கள் குவித்த போது ஆறாவது பந்துவீச்சாளராக வந்த சிவம் தூபே இந்த கூட்டணியை உடைத்தார்.
அதுவே பாகிஸ்தான் 200 ரன்களுக்கு மேல் அடிக்காமல் போக திருப்புமுனை விக்கெட் ஆக அமைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரராக இர்பான் பதான் இந்த தருணமே இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “கேப்டன் சூரியகுமார் யாதவ் விடாமல் இந்திய அணிக்கு சிவம்தூபேவை திரும்பக் கொண்டு வந்த விஷயம் பாராட்டத்தக்கதாகும். பாகிஸ்தான் அணிக்கு ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்து கொண்டிருந்தபோது அய்யூபை சிவம் துபே வெளியேற்றிய விதம் பாராட்டத்தக்கதாகும். அதனால்தான் அவர்களால் 200 ரன்கள் கடக்க முடியவில்லை. இந்திய அணி அந்த வேகத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டது. உங்கள் ஆறாவது பந்துவீச்சாளர் அதை செய்தது ஒரு பெரிய விஷயமாகும். சிவம் துபேவிடமிருந்து ஒரு சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.
இதையும் படிங்க:பாக் வீரர்கள் சம்பந்தம் இல்லாம சண்டைக்கு வந்தாங்க.. அப்பவே நானும் கில்லும் முடிவு பண்ணிட்டோம் – அபிஷேக் ஷர்மா பேச்சு
இது பெரிய ஸ்கோர் இல்லை என்றாலும் இந்திய அணி இடம் சற்று அழுத்தம் இருந்தது. அவர் ஆரம்பித்த விதம் மிகவும் அற்புதமாக அமைந்தது. கில் மற்றும் அபிஷேக் ஷர்மா ஜோடி இந்திய அணிக்கு விளையாடிய விதம் மிகவும் சிறப்பான தருணம். கில் அபிஷேக் உடன் இணைந்து தனது அற்புதமான சக்தியையும் திறமையும் வெளிப்படுத்தினார்” என்று இர்பான் பதான் பாராட்டி பேசியிருக்கிறார்.