இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான லெஜென்ஸ் லீக் 2024 கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. மூத்த வீரர்கள் பங்குபெறும் இந்த தொடர் ஐபிஎல் தொடர் போலவே டி20 கிரிக்கெட் வடிவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சீசனில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் இர்பான் பதான் தலைமையிலான கோனார்க் சூர்யாஸ் ஒடிசா அணியும், ஹர்பஜன் சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணியும் விளையாடின.
ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்குபெறும் லெஜென்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற மணிப்பால் டைகர்ஸ் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதன்படி முதலில் களம் இறங்கிய இர்பான் பதான் தலைமையிலான கோனார்க் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் மட்டும் குவித்தது. முன்னணி வீரர்கள் நிரம்பி வழிந்த இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு 8 ரன் ரன்களில் வெளியேறினார்.
அவருக்குப் பிறகு களம் இறங்கிய கெவின் ஓ பிரயன் 6 ரன்னில் வெளியேற, நியூசிலாந்து அணியின் முன்னாள் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன ராஸ் டைலர் 14 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் இர்பான் பதான் 23 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 18 ரன்கள் குவித்திருந்த நிலையில் எதிரணியின் கேப்டன் ஹர்பஜன் சிங் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
இதனால் கோனார்க் அணி 104 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக பினார் நான்கு ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். அதற்குப் பிறகு வெற்றியிலக்கை நோக்கி களம் இறங்கிய மணிப்பால் டைகர்ஸ் அணி கோனார் அணியின் சிறப்பான பந்துவீச்சால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேற, மனோஜ் திவாரி இரண்டு ரன்னிலும் சௌரப் திவாரி 5 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ மிடில் வரிசையில் பிணார் மற்றும் கிறிஸ்டியன் ஜோடி 35 பந்துகளில் 49 ரன்கள் குவித்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஆட்டம் இழந்த பிறகு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட, 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கடைசி பந்தில் பினார் சிஸ்டருக்கு அடிக்க முயன்ற பந்தை அம்பத்தி ராயுடு எல்லை கயிற்றின் அருகே சென்று அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் மணிப்பால் அணி தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க : விராட் கோலி ரெக்கார்டை சமன் செய்த குர்பாஸ்.. சச்சின் சாதனையை உடைக்கவும் வாய்ப்பு.. தென் ஆப்பிரிக்க போட்டி
இதனால் வெற்றி பெறும் தருவாயில் இருந்த ஹர்பஜன்சிங் தலைமையிலான மணிப்பால் டைகர்ஸ் அணி இந்தத் தொடரை தோல்வியோடு துவங்குகிறது.