விராட் கோலி ரெக்கார்டை சமன் செய்த குர்பாஸ்.. சச்சின் சாதனையை உடைக்கவும் வாய்ப்பு.. தென் ஆப்பிரிக்க போட்டி

0
485
Gurbaz

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தற்போது சார்ஜாவில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதிக் கொள்கின்றன. இந்த தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் ரஹனுல்லா குர்பாஸ் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 106 ரன்களில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி நடைபெற்ற வருகிறது. இந்த போட்டிகள் வெல்லும் பட்சத்தில் ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் தொடர் வெற்றியை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தைரியமான முடிவு எடுத்த ஆப்கானிஸ்தான்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் யோசிக்காமல் முதலில் பேட்டிங் செய்வது என முடிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணியின் ஒரு துவக்க ஆட்டக்காரர் ரியாஸ் ஹசன் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து வந்த ரஹமத் ஷா சிறப்பாக விளையாடி 66 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். நல்ல அடித்தளம் அமைந்ததால் அடுத்து அதிரடி ஆல் ரவுண்டர் அஸமத்துல்லா ஓமர்சாய் அனுப்பப்பட்டார்.

ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் அசமத்துல்லா ஓமர்சாய் இருவரும் இணைந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நொறுக்கி தள்ளினார்கள். சிறப்பாக விளையாடிய ரஹமனுல்லா குர்பாஸ் சதம் அடித்து 110 பந்துகளில் பத்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு இது ஏழாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்து அதிரடியாக விளையாடிய அஸமத்துல்லா ஓமர்சாய் 50 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. லுங்கி நிகிடி மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

ரஹமனுல்லா குர்பாஸ் அசத்தல் சாதனை

தற்போது 23 வயதாகும் ரஹமனுல்லா குர்பாஸ் இந்தப் போட்டியில் ஏழாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சதத்தை அடித்தார். மேலும் இந்த வயதில் அதிக ஒருநாள் கிரிக்கெட் சதம் அடித்திருந்த விராட் கோலி சாதனையை சமன் செய்தார். இந்தப் பட்டியலில் சச்சின் மற்றும் குயிண்டன் டி காக் 8 சதங்கள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார்கள். நவம்பர் மாதம் பிறந்த குர்பாஸ் வருகின்ற நவம்பர் மாதத்திற்குள் இரண்டு சதங்கள் அடித்தால் இந்த சாதனையை முறியடிக்கலாம்.

இதையும் படிங்க :

ஒருநாள் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிக சதம் அடித்தவர்கள் :

குயின்டன் டி காக் -8
சச்சின் டெண்டுல்கர் – 8
விராட் கோலி-7
ரஹ்மனுல்லா குர்பாஸ் – 7
பாபர் ஆசம்-6
உபுல் தரங்கா – 6
அகமது ஷெஹ்சாத் – 5
ஷிம்ரோன் ஹெட்மயர் – 5
இப்ராஹிம் சத்ரான் – 5

- Advertisement -