2024 ஐபிஎல்.. எல்லாருக்கும் கேப்டன் கம்மின்ஸ்தான்.. இத்தனை வேலை செய்திருக்கார் – இர்பான் பதான் கருத்து

0
95
Cummins

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்ள இருக்கின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறது. இந்த நிலையில் ஐதராபாத் அணியின் கம்மின்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரின் கேப்டன் என இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு நடைபெற்ற மினி ஏலத்தில் ஹைதராபாத் அணி தங்களின் பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவர முடியாத கம்மின்சை 20.50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. அவரை அணிக்குள் கொண்டு வரும்பொழுது யாராவது பெரிய பேட்ஸ்மேன்கள் வெளியில் செல்ல வேண்டும் என்கின்ற நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் அவரை ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச விலைக்கு வாங்கியவுடன் கேப்டன் ஆகவும் ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்தது. தங்களது முதல் போட்டியை கொல்கத்தா அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தோற்று, இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும் இடத்திற்கு அணியை கம்மின்ஸ் கொண்டு வந்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனாக கம்மின்ஸ் எப்படி செயல்பட்டு இருக்கிறார் என்பது குறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் ” கம்மின்ஸ் அவர்களின் கேப்டன்சியை பார்க்கும் பொழுது சில நேரம் அவர் புதிய பந்திலும் பந்து வீசுவதற்கு வந்தார். சில நேரம் அவர் பந்துவீச்சின் முதல் பகுதியில் பந்து வீசுவதற்கே வரவில்லை. அதே சமயத்தில் அவர் கடைசி ஓவர் சென்று வீசினார்.

இப்படி ஒரு போட்டிக்கு கேப்டனாக எந்த இடத்தில் தேவைப்பட்டாலும் சரி அதைச் செய்யக் கூடியவராக இருந்தார். அவர் ஒரு கேப்டனாக முன் நின்று இந்த கடினமான வேலையை நானே செய்யப் போகிறேன் என ஒட்டுமொத்த அணிக்கும் கூறியது போல வேலைகளை செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ப்ளீஸ் சிஎஸ்கே ஃபேன்ஸ்.. எங்க டீம்க்காக இதை மட்டும் செய்யுங்க – அபிஷேக் ஷர்மா வேண்டுகோள்

இந்த ஐபிஎல் தொடரில் அவருடைய மொத்த கிரிக்கெட் வாழ்க்கையின் அனுபவத்தையும் உள்ளே கொண்டு வந்தார். அவர் ஒரு பெரிய இதயத்தை பெற்றவர். என்னை பொறுத்த வரையில் எல்லா இளைஞர்களுக்கும் அவர்தான் கேப்டன் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்