ப்ளீஸ் சிஎஸ்கே ஃபேன்ஸ்.. எங்க டீம்க்காக இதை மட்டும் செய்யுங்க – அபிஷேக் ஷர்மா வேண்டுகோள்

0
146
Abhishek

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து வெகு சீக்கிரத்தில் இந்திய டி20 அணியின் இடம் பிடிக்கக்கூடிய தூரத்தில் அபிஷேக் ஷர்மா மற்றும் ரியான் பராக் இருவரும் திறமையாக விளையாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்து இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ரியான் பராக் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து, இந்திய டி20 அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பில் தெரிகிறார். இதேபோல் அபிஷேக் ஷர்மா 200 ஸ்ட்ரைக்ரேட்டில் 400 க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ரியான் பாராக்கை விட சீக்கிரத்தில் இந்திய டி20 அணிக்குள் வருவதற்கான வாய்ப்பில் இருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை எடுத்துக் கொண்டால் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடுவதை குறிக்கோளாக வைத்து விளையாடுகிறது. பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால் 160 ரன்கள் எடுத்தால் வெல்ல முடியாது என புரிந்து, விக்கெட்டுகளை இழந்தால் கூட 180 ரகளை தாண்ட வேண்டும் என்பதை அவர்கள் அணுகுமுறையாக வைத்திருக்கிறார்கள்.

ஹைதராபாத் அணியின் இந்த அணுகுமுறைக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் மிகப் பொருத்தமான வீரர்களாக இருக்கிறார்கள். இதில் ஹெட்டை விட கூடுதல் சிக்ஸர்கள் அடிக்க கூடியவராக அபிஷேக் சர்மா நடப்பு ஐபிஎல் தொடரில் இருக்கிறார்.

மேலும் அபிஷேக் ஷர்மா இடதுகை சுழல் பந்து வீச்சையும் வீச முடியும் என்கின்ற காரணத்தினால் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறார். இரண்டாவது தகுதிச்சுற்றில் அபிஷேக் சர்மா பந்துவீச்சில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி ஹைதராபாத் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹைதராபாத் இதை மட்டும் மாத்திக்காதிங்க.. கேகேஆரை அடிக்க இந்த வியூகம் தேவை – சுரேஷ் ரெய்னா யோசனை

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே ரசிகர்கள் குறித்து பேசிய அபிஷேக் சர்மா “இங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். எனவே அனைத்து சிஎஸ்கே ரசிகர்களும் திரண்டு வந்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.