நேற்று டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி சிறப்பாக விளையாடிய 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா பேட்டி அளித்திருக்கிறார்.
ஜிம்பாப்வே அணி பி பிரிவில் இடம்பெற்று ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளை தோற்கடித்து, அந்தப் பிரிவில் ஒரு போட்டிகளை கூட தோற்காமல் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய மாற்றம்
கடந்த முறை ஜிம்பாப்வே அணி முதலில் டி20 உலகக் கோப்பை தொடருக்கே தகுதி பெறவில்லை. அவர்கள் சிறிய அணியிடம் தோற்று தங்கள் வாய்ப்பை இழந்தார்கள். இதற்கு அடுத்து மீண்டும் கடுமையாக உழைத்து தகுதி சுற்றில் வெற்றி பெற்று எந்த முறை டி20 உலகக் கோப்பைக்கு வந்தார்கள்.
முதல் போட்டியிலேயே பலமான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு புத்திசாலித்தனமாக விக்கெட்டுகளை காப்பாற்றில் விளையாடி பிறகு ஆஸ்திரேலியாவை வீழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இலங்கை அணியும் வீழ்த்தி அசத்தியுள்ளார்கள்.
டாஸ் தேவை இல்லை என்று சொன்னேன்
இலங்கை போட்டி குறித்து பேசிய சிக்கந்தர் ராஸா கூறும் பொழுது “நாங்கள் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாசை தோற்று விட்டோம். டாஸ் எங்களுக்கு எதிராக அமைந்துவிட்டது. நான் எங்கள் அணியிடம் சென்று சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் நமக்கு டாஸ் எந்த விதத்திலும் தேவை கிடையாது; நாம் சிறப்பாக முதலில் பந்து வீசி இரண்டாவதாக பேட்டிங் செய்து இலங்கை அணியை வெல்லலாம் என்று கூறினேன்”
இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா இருப்பதால்தான் எதிரணி கேப்டன் இத பிளான் பண்ண முடியாம மாட்டுறாங்க – முகமது கைஃப்
“மேலும் இலங்கை 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது. இந்த மைதானத்தில் இந்த ஸ்கோர் சேஸ் செய்வது கடினம்தான். நான் மீண்டும் வீரர்களை அழைத்து இலங்கை அணி 10 ரன்கள் குறைவாக எடுத்திருக்கிறது எனவே நம்மால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று கூறி நம்பிக்கை படுத்தினேன். பிறகு நாங்கள் ஒரு அணியாக சேர்ந்து இந்த போட்டியை வென்றிருக்கிறோம். எங்களுக்கு இரண்டாவது சுற்றில் மூன்று போட்டிகள் உள்ளன. அதில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்?” என்று கூறி இருக்கிறார்.






