தற்போது விராட் கோலி பேட்டிங் அப்ரோச் எப்படி மாறி இருக்கிறது? என்பது குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருக்கிறார். நேற்றைய போட்டியில் விராட் கோலி உள்ளே வந்ததும் அதிரடியாக ஆறு பவுண்டரிகள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விராட் கோலியின் பேட்டிங் அப்ரோச் மிகவும் அதிரடியாக இருக்கிறது. முன்பு அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு விளையாடுவார். ஆனால் இப்பொழுது உள்ளே வந்ததிலிருந்து அதிரடியாக விளையாடுகிறார்.
ரகசியத்தை உடைத்த விராட் கோலி
தற்போது தொடர்ந்து தான் அதிரடியாக விளையாட விரும்புவதாக விராட் கோலி என்று தெரிவித்திருந்தார். நேற்று முதல் 20 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் அவர் அடித்தார். மேலும் அந்த 20 பந்துகளை சந்தித்ததுமே தன்னால் பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முடியும் என முடிவு செய்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இத்துடன் இந்திய அணி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்தால் தான் இன்னும் அதிரடியாக விளையாடி இருப்பேன் எனவும், இரண்டாவது பேட்டிங் செய்த காரணத்தினால் இலக்கை நோக்கி மட்டுமே விளையாடினேன் என்றும் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது பேட்டிங் அணுகுமுறையை மொத்தமாக மாற்றி விட்டார் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
விராட் கோலி நிலையானவர்தான்
இது குறித்து பேசி உள்ள இர்பான் பதான் கூறும் பொழுது ” விராட் கோலி தற்போது பேட்டிங் செய்யும் அணுகுமுறையை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அவர் நிலையானவராகவே இருக்கிறார். கடைசி ஏழு போட்டிகளில் நான்கு அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்கள் அடித்து இருக்கிறார். ஒரு வீரர் தொடர்ந்து விரைவாக ஆட்டம் இழந்து கொண்டு இருந்தால் அவரிடம் ஏதோ ஒரு விஷயம் தவறாக போகிறது என்று அர்த்தம். ஆனால் விராட் கோலி இடம் அப்படி எதுவும் கிடையாது”
இதையும் படிங்க : மோசமான விமர்சனங்களால் ஹர்ஷித் ராணா பாதிக்கப்பட்டார்.. அதுக்காக இதை செய்தார் – ரகானே பேச்சு
“இந்த வகையில் பார்த்தால் தற்போது விராட் கோலியின் தலையின் நிலை பேட்டிங் செய்யும்பொழுது வலுவாக இருக்கிறது. இது அவருடைய பேட்டிங் டெக்னிக்கை மிகவும் நுட்பமாக வெளிப்படுத்துகிறது. மேலும் உடலில் உங்களுடைய கால்கள் மற்றும் இடுப்பு மிகவும் வலிமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பேட்ஸ்மேன் உள்ளே வந்து பெரிய ஷாட் விளையாட முடியும். மேலும் அவர் முதல் 20 பந்துகளில் அதிரடியாக ஆறு பவுண்டரிகள் அடித்து விட்டு உடனடியாக தனது அணுகுமுறையை மெதுவாக மாற்றிக் கொண்டார். இது என்னை இன்னும் ஆச்சரியப்படுத்துகிறது” என்று கூறி இருக்கிறார்.






