நாளை நடைபெற உள்ள ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாட உள்ளன.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் ஆசிய கோப்பை தொடர் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்த ஆசிய கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வெற்றிகரமான அணியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் அபாரமான வீரராக விளங்கி வருகிறார்.
இதுவரை கிட்டத்தட்ட மூன்று அரை சதங்களுக்கு மேல் அவர் அடித்திருக்கும் நிலையில், நாளை நடைபெற போகும் போட்டி குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் அபிஷேக் ஷர்மா குறித்தும் நாளைய போட்டி குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார். மேலும் அபிஷேக் ஷர்மா தனது பேட்டிங் ஸ்டைலை எந்த காரணம் கொண்டும் எப்போதும் மாற்றக்கூடாது என சில அறிவுரைகளை விளங்கி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “ஆசிய கோப்பையில் மட்டும் இந்தியாவில் ரன்களில் 35 முதல் 45 சதவீதம் வரை அபிஷேக் ஷர்மா அடித்திருக்கிறார். இது மிகவும் அற்புதமான விஷயமாகும். மேலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் நல்ல நிலையில் இருக்கிறது. இது எதுவுமே எளிதான காரியம் கிடையாது. இந்த வீரர் விளையாடுவதை நேரில் பார்க்க வேண்டும் என்று பலர் டிக்கெட் வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள். அவர் சீரானவர் மற்றும் சிக்ஸ் அடிக்கும் இயந்திரமாக மாறிவிட்டார். மேலும் இரண்டு சதங்கள் அடித்து விட்டார். மேலும் அவர் சில பந்துகள் தொடர்ந்து விளையாடினால் எதிரணியை பின்னுக்கு தள்ளி விடுவார்.
இதையும் படிங்க:நான் ரொம்ப நாளா எதிர்பார்த்ததை திலக் வர்மா செஞ்சிட்டார்.. அபிஷேக் செஞ்ச அது கூட நல்லா இருக்கு – சேவாக் பேட்டி
இப்போது எல்லோருமே நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணி அபிஷேக்சர்மாவை குறிக்கும் என்று நினைப்பார்கள். சராசரி விதி இருக்கலாம் ஒருவேளை அவர் அடுத்த சில நாட்களில் ரன்கள் எடுக்காமல் போகலாம். ஆனால் அவரது முறை மாறக்கூடாது. அவரை மட்டும் வெளியேற்றினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்று நினைத்தால் மற்ற தரமான இந்திய வீரர்களும் இருக்கிறார்கள் என்று நினைவில் கொள்ள வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.