இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்த இரண்டு வீரர்கள் குறித்த எதிர்மறையான பேச்சுக்களை நிறுத்த வேண்டும் என்று பேசி இருக்கிறார்.
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்கி 57 ரன்கள் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் 60 ரன்கள் குவிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 349 ரன்கள் குவித்தது.
அதற்குப் பிறகு பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் 17 ரன்னில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். இது சூழ்நிலையில் விராட் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறும் ஒரு நாள் உலகை கோப்பையில் விளையாடுவார்களா என்பது குறித்த கேள்விகள் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்று இர்பான் பதான் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து இர்பான் பதான் பேசும்போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாடும் விதத்தை பொருத்தவரை நிபுணர்களாகிய நாம் 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் விளையாடுவது குறித்த பேச்சுக்களை ஒதுக்கி வைக்க வேண்டும். அவர்கள் எவ்வளவு கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதை ரசிக்கட்டும். சர்வதேச கிரிக்கெட்டுக்கு வெளியே கூட அவர்கள் தங்களால் முடிந்த வரை விளையாட வேண்டும் என்று கூறுகிறேன்.
இதையும் படிங்க:எனக்கு பெரிய பயிற்சி தேவையில்லை.. 37 வயசுல இதுதான் முக்கியம்.. 300 போட்டி அனுபவம் இருக்கு – விராட் கோலி பேச்சு
அவர்கள் கொண்டுவரும் ஆற்றல் வியக்க வைக்கிறது. குறிப்பாக அதுவும் விராட் கோலி இந்தியாவில் தங்குவதில்லை. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவது என்பது எளிதான காரியம் கிடையாது. இது அவரது மனநிலை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை காட்டுகிறது. அது மிகவும் கூர்மையான இடத்தில் இருப்பதை குறிக்கிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.