இந்திய கிரிக்கெட்

ஐயா நான் என்ன செய்யணும்.. அவர்கிட்ட இதைக்கேட்க கோலிக்கு எவ்ளோ நேரம் ஆகும்.? – இர்பான் பதான் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததை தவிர மற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் மிக சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் இர்பான் பதான் விராட் கோலி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

விராட் கோலியின் மோசமான ஃபார்ம்

இந்திய கிரிக்கெட்டின் முடி சூடா மன்னனாக விளங்கி வரும் விராட் கோலி கடந்த சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார். தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த நிலையில் அவர் திரும்ப பேட்டிங் ஃபார்ம்க்கு வந்து விட்டார் என்று அனைவரும் நினைத்தார்கள். அந்தப் போட்டிக்குப் பிறகு கிட்டத்தட்ட எட்டு இன்னிங்ஸ்களில் அவரது பேட்டிங் மிக சுமாராகவே இருந்தது.

கடந்த ஐந்து வருடங்களில் அவரது பேட்டிங் சராசரி 30 ஆக இருக்கும் நிலையில் ஒரு சாதாரண இளைஞனுக்கு வாய்ப்பு கொடுத்தால் கூட அவரால் இதை நிர்வகிக்க முடியும் எனவும் விராட் கோலி போன்ற ஒரு ஜாம்பவான் வீரரிடம் இருந்து இதனை எதிர்பார்க்கவில்லை என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருக்கிறார். மேலும் சுனில் கவாஸ்கர் ஆஸ்திரிலியாவிலேயே இருக்கும் நிலையில் அவரிடம் கூட தனது தவறை திருத்திக்கொள்ள ஆலோசனைகள் கேட்கவில்லை என குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

இதைக் கேட்க எவ்வளவு நேரம் ஆகும்

இது குறித்து இர்பான் பதான் கூறும் பொழுது “விராட் கோலி நிறைய ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் 2024 ஆம் ஆண்டு அவரது முதல் இன்னிங்ஸ் சராசரி வெறும் 15. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது பேட்டிங் சராசரி எடுத்துக் கொண்டால் வெறும் 30 ஆக இருக்கிறது. இந்திய அணியின் ஒரு மூத்த வீரர் இந்த சராசரி வைத்திருப்பது நியாயமானதா? ஒரு இளைஞனுக்கு நீண்ட வாய்ப்பு கொடுப்பது நல்லது. தயாராக இருக்கச் சொல்லுங்கள், அவன் கூட 25-30 சராசரி வைத்திருப்பான். நாங்கள் பேசும்போது விராட் கோலி நிச்சயமாக தரம் தாழ்த்த வில்லை. அவர் இந்தியாவுக்காக நிறைய சாதனைகளை செய்திருக்கிறார். நிறைய முறை சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க:டாப் ஆர்டர் பலவீனத்தை மறைக்க.. தேவையே இல்லாம இதை செஞ்சு இந்திய அணி மாட்டிக்கிச்சு – ஆகாஷ் சோப்ரா கேள்வி

ஆனால் இந்த டெஸ்ட் தொடரில் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து வெளியேறி இருக்கிறார். சுனில் கவாஸ்கர் அவரது பேட்டிங் தொழில்நுட்பத்தில் உள்ள தவறை சுட்டிக்காட்டினார். அதை விராட் கோலி மேம்படுத்தவே இல்லை. சுனில் கவாஸ்கர் சார் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கிறார். அவரிடம், ஐயா என் தவறை திருத்திக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்க எவ்வளவு நேரம் ஆகும். தவறை திருத்திக்கொள்ள கடின உழைப்பு தேவைப்படுகிறது. ஆனால் அந்த உழைப்பு விராட் கோலி தற்போது காட்டவே இல்லை” என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts