டாப் ஆர்டர் பலவீனத்தை மறைக்க.. தேவையே இல்லாம இதை செஞ்சு இந்திய அணி மாட்டிக்கிச்சு – ஆகாஷ் சோப்ரா கேள்வி

0
345

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த சூழ்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் குறித்து ஆகாஷ் சோப்ரா சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி தோல்வி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று நம்பிக்கை அளித்தது. ஆனால் இரண்டாவது போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, இரண்டு போட்டியில் தோல்வியும் ஒரு போட்டி டிரா என இக்கட்டான சூழ்நிலையில் ஐந்தாவது போட்டிக்கும் முன்பு ரோகித் சர்மா தனது கேப்டன் பதவியை விட்டு விலகினார். இந்த சூழ்நிலையில் பும்ரா தலைமையிலான இந்திய அணி ஐந்தாவது போட்டியில் களமிறங்கியது.

இந்த நிலையில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை தொடர்ந்து பிரச்சினை அளிக்கும் வகையில் இருந்ததால் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் 8வது வரிசை வரையிலும் இருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆல் ரவுண்டர் பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் அதிக ஓவர்கள் வீசாதது ஏன் என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

டாப் ஆர்டர் பிரச்சனை

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இங்கு தேர்வுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நித்திஷ் குமார் ரெட்டி போன்ற சிறந்த தேர்வுகள் அணியின் பிரச்சனையை சம நிலைக்குள் கொண்டு வந்தது. அவரது தேர்வு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக அமைந்தது. ஆல் ரவுண்டர்கள் மீது நாங்கள் வெறித்தனமாக இருக்கிறோம். ஆல் ரவுண்டர் வீரர்களை தேர்வு செய்வதை நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொண்டு விளையாடுகிறார்கள் என்பதன் அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்கிறோம். எட்டாவது வரிசை வரை எங்களிடம் பேட்டிங் உள்ளது.

இதையும் படிங்க:கம்பீரின் பயிற்சி குழுவை ஏன் நீக்க கூடாது?.. அடுத்து இந்த முக்கிய விஷயம் வேற இருக்கு – சுனில் கவாஸ்கர் விமர்சனம்

ஆனால் முதல் போட்டியை தவிர எந்த போட்டியில் 400 ரன்கள் இந்திய அணி எடுத்தது. உங்கள் டாப் ஆர்டரை பாதுகாக்க பின் வரிசையில் பேட்டிங் வீரர்களை தேர்வு செய்து கொள்வதால் அது இந்திய அணிக்கு முற்றிலும் பின்வாங்கக் கூடிய வகையில் அமைந்தது. வாஷிங்டன் சுந்தர் ஒரு சொத்து, ஆனால் அவர் முழு போட்டியிலும் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினார். அவரை எதற்காக அணியில் எடுத்தீர்கள். நீங்கள் அவரை பேட்டிங் செய்வதற்காக விளையாட வைக்கவில்லை” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -