தற்போது சில போட்டிகளாக விராட் கோலி செட் ஆகிவிட்டு மிகவும் மெதுவாக விளையாடுகிறார் என இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளேவில் 20 பந்துகளை சந்தித்த விராட் கோலி 40 ரன்கள் எடுத்து 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். ஆனால் அதற்கடுத்து ஒன்பது ரன்கள் எடுப்பதற்கு அவருக்கு 17 ரன்கள் வெளியில் தேவைப்பட்டது.
காரணம் இதுவாக இருக்கலாம்
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் போது “கடந்த இரண்டு போட்டிகளாக பார்க்கும் போது விராட் கோலி செட் ஆகி விட்டு மிகவும் மெதுவாக விளையாடுவது போல தெரிகிறது. அவர் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் எடுக்கிறார். ஒருவேளை அவருக்கு காயம் இருக்கலாம் என்று நினைக்கிறேன் அதனால்தான். ஃபீல்டு செய்வதற்கு வரவில்லை”
” இந்த போட்டியையும் நாம் எடுத்துக் கொண்டால் அவர் பவர் பிளேவில் முதல் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். ஆனால் பவர் பிளே முடிந்து வெளியில் அவர் 9 ரன்கள் எடுப்பதற்கு 14 பந்துகள் எடுத்துக் கொண்டார். இறுதியாக அவர் 34 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்”
ஆரஞ்சு தொப்பிக்கு தகுதியானவர்
“பேட்டிங் பற்றி பேசும்போது ஆரஞ்சு தொப்பி மற்றும் விராட் கோலி இருவரும் ஒன்றாகவே இருப்பார்கள். அது இல்லாமல் அவரை கற்பனை செய்வது முடியாது. இந்த சீசன் தொடங்கும் முன்பாகவே நான் இதை சொல்லி இருந்தேன். அவர் நிச்சயம் ஆரஞ்சு தொப்பிக்கான போட்டியில் இருப்பார்”
இதையும் படிங்க : இந்த முன்னாள் சிஎஸ்கே பசங்க தீபக் ஷர்துல் 2 பேரும் ஒண்ணா இருந்தா.. மும்பை அடி வாங்கியே தீரும்.. இவங்கள கொண்டு வாங்க – ஸ்ரீகாந்த் கருத்து
“தற்போது ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை எட்டி இருக்கிறது. இதற்கு முழு தகுதியும் அவர்களுக்கு உள்ளது. நடப்பு சாம்பியனாக அவர்கள் எப்படி விளையாட வேண்டுமோ அதே போல விளையாடி வருகிறார்கள் அவர்களுடைய பந்துவீச்சு மிகச் சிறப்பாக உள்ளது” என்று கூறியிருக்கிறார்.






