இந்த முன்னாள் சிஎஸ்கே பசங்க தீபக் ஷர்துல் 2 பேரும் ஒண்ணா இருந்தா.. மும்பை அடி வாங்கியே தீரும்.. இவங்கள கொண்டு வாங்க – ஸ்ரீகாந்த் கருத்து

0
38
Srikanth

இன்று ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அந்த அணி பிளேயிங் லெவன் எவ்வாறு அமைய வேண்டும் என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த போட்டியில் காயத்தின் காரணமாக மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. எனவே தொடக்க இடத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம்.

- Advertisement -

இருவரும் சேர்ந்து இருக்கக் கூடாது

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி பேப்பரில் மிகவும் வலிமையாக இருக்கிறது. ஆனால் களத்தில் இறங்கி விளையாடும் பொழுது திறமைக்கு ஏற்ற வகையில் அந்த அணி விளையாடுவதில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டன்சி சுமாராக உள்ளது. எனவே நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளை தோற்று இருக்கிறார்கள்.

இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறும் பொழுது “நீங்கள் ஒரே பிளேயிங் லெவனில் தீபக் சகர் மற்றும் சர்துல் தாக்கூர் இருவரையும் விளையாடக்கூடாது. அப்படி ஆடினால் ஆட்டம் அங்கேயே முடிந்து விடும். மேலும் தாக்கூரை ஒரு ஓவர் பவர் பிளேவுக்கு கொண்டு வரக்கூடாது. அதே ஓவரில் அவர் 20 முதல் 30 ரன்கள் கொடுத்து முடித்து விடுவார். ஆனால் எட்டாவது இடத்தில் பேட்டிங் வேண்டும் என இவரை கொண்டு வருவார்கள்”

- Advertisement -

இந்தப் பையன் சிறந்தவன்

“அதே சமயத்தில் நமன் திர் சிறந்த முறையில் ஆப் ஸ்பின் வீசுவார். எனவே அவரை இரண்டு ஓவருக்கு பயன்படுத்திக் கொள்ள ஹர்திக் பாண்டியா யோசிக்க வேண்டும். அதே சமயத்தில் போல்டை நீக்கிவிட வேண்டும் அஸ்வினி குமாரை கொண்டு வர வேண்டும். அப்பொழுதுதான் ரோகித் சர்மா இடத்துக்கு குயிண்டன் டி காக்கை கொண்டு வர முடியும்”

இதையும் படிங்க : ஆர்சிபி மீது சிஎஸ்கே புகார்.. இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு.. காசி விஸ்வநாதன் கோபம்

“மேலும் பேட்டிங் ஆர்டரில் நமது மூன்றாவது இடத்திலும் சூரியகுமார் நான்காவது இடத்திலும் வரவேண்டும். ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்தில் ரூதர்போர்டு இருக்க வேண்டும். ஏழாவது இடத்தில் நீங்கள் திலக் வர்மாவை வைத்துக் கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -