தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் பேசுவதில்லை என்ற செய்திகள் சமூக வலைதளங்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிசான்சு கோடக் பதிலளித்திருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சீக்கிரத்தில் ஓய்வு பெறுவதற்கு பின்னணியில் கம்பீர் நெருக்கடி அதிகம் இருந்தது என்று கூறப்பட்டது. மேலும் மூத்த வீரர்கள் இருவரும் கம்பீருடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை என்றும் சொல்லப்பட்டது. ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா மற்றும் தற்போதைய நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் கம்பீருடன் இவர்கள் பேசுவதை பார்க்க முடியவில்லை.
உண்மையில் என்ன நடக்கிறது?
ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் ரோகித் சர்மா சதமும் விராட் கோலி அரை சதமும் அடிக்க இந்திய அணி வெற்றி பெற்றது. அதற்கு முன்பான இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்ததால் தொடரை இழந்தது.
இந்த நிலையில் அணி தோல்வி அடைந்து தொடரை இழந்திருக்கும் போது தனிப்பட்ட வீரர்களின் சாதனைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது என பயிற்சியாளர் கம்பீர் வெளிப்படையாகவே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். இது அவர்களுக்குள் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
உண்மை இதுதான்
இதுகுறித்து பேட்டிங் பயிற்சியாளர் சிசான்சு கோடக் கூறும்பொழுது ” சமூகவலைகளில் என்ன சென்று கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அவற்றைப் பார்ப்பது கிடையாது. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகவும் மூத்த வீரர்கள். நான் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் கம்பீருடன் போட்டி குறித்தும், தென்னாப்பிரிக்கா சென்று விளையாடுவது குறித்தும், மேலும் நாங்கள் விளையாடக்கூடிய தொடர்கள் குறித்தும் அதிகம் பேசுவதை பார்க்கிறேன். அவர்கள் தங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிர்கிறார்கள்”
இதையும் படிங்க: வாஷிங்டன் சுந்தருக்கு சரியான மாற்றுவீரர் இவர்தான்.. ஆனா அவர் இப்போ இந்திய அணிக்கே சிக்கலா இருக்காரு – இர்பான் பதான் பேட்டி
“அவர்களுக்கு தேவை என்றால் அவர்கள் முன்கூட்டியே வந்து பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுவதால் எல்லா போட்டிகளிலும் இந்திய அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்வதை நிறுத்துவது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






