கம்மின்சிடம் மீண்டும் கோலி தோற்றார்.. அவர் மூளைக்கு இவர் கிட்ட பதில் இல்லை – இர்பான் பதான் பேச்சு

0
140
Virat

நேற்று ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி ஹைதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி இருக்கிறது. ஆனாலும் கூட தோல்வியடைந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ்க்கு பாராட்டும், வெற்றி பெற்ற அணியின் வீரர் விராட் கோலிக்கு விமர்சனங்களும் வருகின்றன. இதுபோலவே இர்பான் பதானும் பேசியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பவர் பிளேவில் விராட் கோலி அதிரடியாக விளையாட, பவர் பிளே முடிந்ததும் ஷாபாஷ் அகமத் மற்றும் ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர்கள் எல்லோரும் சேர்ந்து, அவரை மேற்கொண்டு 19 பந்தில் 25 ரன்கள் மட்டுமே எடுக்க விட்டார்கள்.

- Advertisement -

விராட் கோலி ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ் மற்றும் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களால் எந்த அளவிற்கு தடுக்கப்பட்டார் என்றால், பவர் பிளே முடிந்து 15ஆவது ஓவர் வரையில் அவர் களத்தில் இருந்தும் கூட, அவரால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாத அளவுக்கு தடுக்கப்பட்டார். நேற்று விராட் கோலி தான் பேட்டிங் செய்த விதத்தில் அவரே திருப்தி அடையவில்லை.

இந்த நிலையில் அவர் 118 ஸ்ட்ரைக் ரேட் உடன், 43 பந்தில் 51 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். கம்மின்ஸ் கேப்டன்ஷியில் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பின்பாக மீண்டும் ஒருமுறை விராட் கோலி அரைசதம் அடித்தும் தோல்வியடைந்திருக்கிறார். எனவே தோல்வி அடைந்த கேப்டன் கம்மின்ஸ் நிறைய பாராட்டுகளை பெற்று வருகிறார்.

இதுகுறித்து இர்பான் பதான் கூறும்பொழுது “கம்மின்ஸ் முன்னிலையில் மீண்டும் விராட் கோலி ஒருமுறை தோல்வி அடைந்தார். ஹைதராபாத் அணியின் கேப்டன் புத்திசாலித்தனத்திற்கு விராட் கோலி இடம் பதில் இல்லை. விராட்கோலி யை ரன்கள் எடுக்க விடாமல், கம்மின்ஸ் நிறைய வேரியேஷன்களை பயன்படுத்தினார். ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களும், விராட் கோலி அதிரடியாக வெளிப்படாமல் இருக்க சரியான அளவில் இருந்தார்கள். அவர்கள் விராட் கோலிக்கு அடிப்பதற்கு ஏதுவாக இடமோ வேகமோ கொடுக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : அர்ஸ்தீப் சிராஜ் வேண்டாம்.. இந்த 2 புது பசங்கள டி20 உலக கோப்பைக்கு கூட்டிட்டு போங்க – நவ்ஜோத் சிங் சித்து தேர்வு

பந்துகள் விராட் கோலி அடிக்கும் இடத்தில் இருந்து தள்ளி வைக்கப்பட்டன. இதன் காரணமாக விராட் கோலி வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்ய வேண்டிய கட்டாயம் உருவானது. ஒட்டுமொத்தமாக கம்மின்ஸ் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு எதிராக சரியான திட்டங்களை உருவாக்கி அதை மிகச் சரியாக செயல்படுத்தவும் செய்தார்” எனக் கூறியிருக்கிறார்.