தற்போது இந்திய டி20 அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக வந்திருப்பது கேப்டன் சூரியகுமார் யாதவக்கு பாதுகாப்பின்மையை உருவாக்காது என இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணிக்கு தற்போது சூரியகுமார் யாதவ் கேப்டனாக இருந்து வருகிறார். அவருக்கு வயது 34 ஆகிறது. அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை தொடரட்டும் பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு கில் கேப்டனாக கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா சம்மதம் தெரிவித்து இருப்பார்
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “இந்திய டி20 அணிக்கு கில் ஆரம்பத்தில் துணை கேப்டனாக இருந்தார். பின்பு அவர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட சென்று விட்டார். தற்போது கில்லை மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கும் முடிவுக்கு சூரிய குமாரின் சம்மதம் இல்லாமல் நடந்திருக்காது. நிச்சயம் அவருக்கு இதில் சம்பந்தம் உண்டு. அவருக்கு இந்திய கிரிக்கெட் எதிர்காலம் குறித்து பெரிய பிச்சர் தெரியும்”
“தற்போது அவருக்கு வயது 34. எனவே களத்தில் செயல்படுவதை தாண்டி அவருக்கு வேறு பொறுப்புகள் இருக்கிறது என்பதை அவர் அறிவார். அவர் அணியை கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும் அணிக்குள் புதிய தலைமைத்துவத்தை அவர் உருவாக்கி வளர்க்க வேண்டும். அவர் அதைச் செய்ய தொடங்கிவிட்டார்” என்று நான் நினைக்கிறேன்.
சூர்யாவுக்கு அழுத்தம் இல்லை
“இதனால் சூரியகுமார் அழுத்தம் ஏற்படலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் கில் துணை கேப்டனாக இருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு தொலைநோக்காக நன்மை கொடுக்கக் கூடியதாகும். இது சூர்யாவை தலைவராகவும் சிறப்பாக காட்டுகிறது. கிரிக்கெட் சமூகத்தில் அவருக்கு பெருமையையும் பெற்று தருகிறது. அவர் நிலைமையை நன்கு அறிந்திருக்கிறார் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்”
இதையும் படிங்க : ஆர்சிபி வெற்றி கொண்டாட்ட துயரம்.. முதல் முறை மௌனம் கலைத்த விராட் கோலி.. உருக்கமான பேச்சு
“சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் எந்த வகையான பேட்ஸ்மேன் என்பதை நாம் நன்கு அறிவோம். அவருக்கு இது எந்தவித அழுத்தத்தையும் உருவாக்கி விடாது. அவர் தான் பாதுகாப்பாக இல்லை என்று உணரக்கூடியவர் கிடையாது. இது அவரை ஒரு தலைவராக மேலும் சிறப்பானவராகவே கொண்டு செல்லும்” என்று கூறியிருக்கிறார்.






