நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இஷான் கிஷானின் அதிரடி பேட்டிங் ஒரு ஸ்டேட்மென்ட் என ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டி இருக்கிறார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்டாட்டம் 20 தொடரில் இஷான் கிஷான் பேட்டிங் மூலம் தனியாக இரண்டு போட்டிகளை இந்திய அணிக்கு வென்று கொடுத்திருக்கிறார். இதன் மூலம் அவர் டி20 உலகக் கோப்பை இந்திய பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று தெரிகிறது.
அது ஒரு ஸ்டேட்மென்ட்
நேற்றைய போட்டியில் இஷான் கிஷான் உள்ளே வந்ததும் முதலில் கொஞ்சம் பொறுமை காட்டினார். பவர் பிளேவுக்கு வெளியேதான் அவர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அதிரடியை கூட்டிய அவர் சோதி பேசிய பன்னிரண்டாவது ஓவரில் 28 ரன்கள் குவித்தார். அங்கிருந்து அவரை தடுக்க முடியாத அளவுக்கு அதிரடி மாறியது.
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இஷான் கிஷான் அடித்தது அடி கிடையாது அது ஒரு ஸ்டேட்மென்ட். நான் டி20 உலகக் கோப்பைக்கு செல்கிறேன் உங்களில் எத்தனை பேர் என்னுடன் வருகிறீர்கள் என்று அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவை பார்த்து அவர் முதல் கேள்வி கேட்டிருக்கிறார்”
கத்தியை தீட்டி இருக்கிறார்
“இஷான் கிஷான் இந்திய அணியில் இருந்து வெளியேறியதற்கு பிறகு இரண்டு மடங்கு வலிமையுடன் திரும்பி இருக்கிறார். அவருடைய ஷாட் ரேஞ்ச் மிகவும் சிறப்பாக இருக்கிறது. தன்னம்பிக்கையும் அதிகரித்து இருக்கிறது. அவர் அணியில் இருந்து வெளியே சென்ற பிறகு கத்தியை கூர் தீட்டிக் கொண்டு இருந்திருக்கிறார். இது பாராட்டு கிடையாது. உண்மையில் சிறப்பாக திரும்பி வந்திருக்கிறார்”
இதையும் படிங்க : பிப்ரவரி 7ஆம் தேதி சாம்சனை பார்க்க முடியாது.. அவர் ஆடுவது திலக் கையில் தான் இருக்கு – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
“மேலும் இஷான் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர். நேற்று அவர் கொஞ்சம் தடுமாறியதற்கு காரணம் அவர் சில காலமாக விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. மேலும் அவர் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் பழகவும் இல்லை. ஆனால் அவர் உண்மையில் சிறப்பான முறையில் விக்கெட் கீப்பிங் செய்வார்” என்று கூறியிருக்கிறார்.






