இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கருண் நாயர் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் செயல்பட்ட விதம் குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் மதிப்பெண்கள் வழங்கியிருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விலகிய நிலையில் சாய் சுதர்சன் மற்றும் கரூர் நாயர் இருவருக்கும் அந்த வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் இருவருமே அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் சோகம்
நடந்து முடிந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பான முறையில் விளையாடவில்லை. இந்திய அணி அந்த டெஸ்ட் தொடரை தோற்பதற்கு இவர்களது மோசமான பேட்டிங் முக்கிய காரணமாக இருந்தது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள்.
இத்துடன் இவர்களது இடத்திற்கு கொண்டுவரப்பட்ட சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் இருவருமே இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நல்ல முறையில் செயல்படவில்லை. ஆனால் மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான முறையில் விளையாடியதால் இந்திய அணி தொடரை சமன் செய்தது. இருந்த போதிலும் இரண்டு மூத்த வீரர்களுக்கான இடம் நிரப்பப்படாதது கவலை அளிக்கிறது.
இருவருக்கும் இதுதான் மதிப்பெண்
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “நான் கருண் நாயருக்கு பத்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுக்கிறேன். அவர் தொடர் முழுவதும் மோசமாக விளையாடவில்லை. அவருக்கு சில நல்ல தொடக்கங்கள் தொடர்ந்து கிடைத்தன. ஆனால் அவற்றை அவரால் பெரிய ரன்னாக மாற்ற முடியவில்லை. நன்கு செட் ஆகி திடீரென ஆட்டம் இழந்தார். லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை வென்று தர வாய்ப்பு இருந்தும் தவற விட்டார். மேலும் வாய்ப்பையும் தவறவிட்டார்”
இதையும் படிங்க : இப்ப எங்களுக்கு தண்ணி காட்டுனது கில் இல்ல.. இந்த கிரேட் பேட்ஸ்மேன்தான் – மொயின் அலி பேச்சு
“சாய் சுதர்சனுக்கு ஐந்து மதிப்பெண்கள் தருகிறேன். அவர் அதிக திறமை இருப்பதாக இந்திய அணியில் அறிமுகமானார். அவரால் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விளையாட முடியவில்லை. ஆனால் முழு தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அவரால் சிறப்பாக வந்திருக்க முடியலாம். இவரும் தன்னுடைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று கூறி இருக்கிறார்.






