தற்போது ஐபிஎல் தொடரில் எல்எஸ்ஜி அணிக்கு மென்டராக வந்திருக்கும் யுவராஜ் சிங் கேப்டன் ரிஷப் பண்டுக்கு சிறப்பு பயிற்சி ஒன்றை அளித்திருப்பதாக இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் எல்எஸ்ஜி அணிக்கு கேப்டனாக வந்த ரிஷப் பண்ட் பேட்ஸ்மேனாக மிகவும் மோசமான முறையில் விளையாடினார். தொடரின் கடைசி போட்டியில் மீண்டு வந்து சதம் அடித்த போதும் அந்த போட்டியிலும் அந்த அணி தோல்வி அடைந்தது.
ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி மற்றும் எல்எஸ்ஜி என இரு அணிகளுக்கு கேப்டன் பொறுப்பை வகித்த போதிலும், அவரால் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியாததோடு இறுதிப் போட்டிக்கும் தங்கள் அணியை கொண்டு செல்ல முடியவில்லை.
தற்போது வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் திறமை மிகவும் சுமாராக இருந்து வருகிறது. இதன் காரணமாக அவர் அதிரடி வீரராக இருந்தும் இந்திய டி20 அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. மேலும் இந்திய ஒருநாள் அணியிலும் இடம் கொடுக்கப்படாது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “ரிஷப் பண்ட் பவர் பிளே நேரத்தில் பேட்டிங் செய்ய வந்து விட வேண்டும். அதற்கு அவர் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். ஆனால் தற்போது இந்த அணியில் நிக்கோலஸ் பூரனுக்காக அவர் மூன்றாவது இடத்தை விட்டுக் கொடுத்து இருக்கிறார். ஆனால் மீண்டும் மூன்றாவது இடத்தில் வந்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : தோனி இத செய்யலனா.. இந்த ஐபிஎல்-ல் ஒரு போட்டி கூட ஆடக்கூடாது.. வெளியே போயிடனும் – அஸ்வின் கருத்து
“யுவராஜ் சிங் உடன் இப்பொழுது ரிஷப் பண்ட் இணைந்து பேட்டிங் பயிற்சி செய்திருக்கிறார். நான் இதற்குப் பிறகு யுவராஜ் சிங்கிடம் பேசினேன். தற்போது தொழில்நுட்ப ரீதியாக ரிஷப் பண்ட் பேட்டிங்கில் எதையும் மாற்றவில்லை என்றும், அவருக்கு மனரீதியான மாற்றம் தேவைப்பட்டதால், அதற்காக மட்டுமே அவரிடம் 4 மணி நேரம் தான் பேசி இருப்பதாக யுவராஜ் சிங் சொன்னார். எனவே ரிஷப் பண்ட் மீண்டும் சிறப்பான முறையில் வந்து விடுவார்” என்று கூறியிருக்கிறார்.