கம்பீர் இதுவரை நீங்க பண்ணது அது ஓகே.. இதுக்கு மேல பண்ணினா ஏத்துக்கவே முடியாது – இர்பான் பதான் எச்சரிக்கை

0
30
Gambhir

இந்திய டி20 அணிகள் கம்பீர் செய்து வந்த மாற்றங்கள் இனியும் தொடரக்கூடாது என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் எச்சரிக்கையாக கூறியிருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் குல்தீப் யாதவ் இடத்திற்கு அர்ஸ்தீப் சிங் மற்றும் சஞ்சு சாம்சன் இடத்திற்கு ஜிதேஷ் சர்மா இருவரும் கொண்டுவரப்பட்டார்கள். இந்த இரண்டு மாற்றத்தையும் இந்திய முன்னாள் வீரர்கள் பலர் வரவேற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

இதுதான் சரியான லெவன்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களம் இறங்கிய இந்திய 11 தான் மிகவும் சரியானது என கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் கூறி வருகிறார்கள். இந்த பிளேயிங் லெவனில் மொத்தம் எட்டு வரையில் பேட்டிங் இருப்பதோடு, சிறந்த ஐந்து பவுலர்கள் இருக்கிறார்கள். மேலும் ஆறாவது பவுலராக சிவம் துபே வருகிறார். மேலும் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் பகுதிநேர பவுலர்களாக இருக்க முடியும்.

இந்த பவுலிங் யூனிட்டில் உள்ள பிரதான பவுலர்கள் அனைவரும் பவர் பிளேவில் பந்து வீச முடியும். மேலும் இறுதிக்கட்ட ஓவர்களை வீசுவதற்கு நான்கு பவுலர்களால் முடியும். இதன் காரணமாக கேப்டன் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பந்துவீச்சாளர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இனி மாற்றம் கூடாது

இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது ” தற்போது ஜிதேஷ் சர்மாவை கொண்டு வந்திருப்பது நியாயமான முடிவு. ஏனென்றால் நீங்கள் கீழ் வரிசையில் சஞ்சு சாம்சனை விளையாட வைத்தால் சில சிரமங்களை சந்திக்க வேண்டியது வரலாம். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரிய அளவில் முதல் மூன்று இடங்களில் மட்டுமே விளையாடி இருக்கிறார்”

இதையும் படிங்க : தெஆ 2வது டி20.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அஸ்திரத்தை மாற்றும் கம்பீர்.. வித்தியாசமாக நடக்குமா?

“தற்போது ஜிதேஷ் சர்மா கீழ் வரிசையில் மிகவும் சிறப்பாக விளையாடக்கூடிய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன். அவர் அதற்காகவே பயிற்சி பெறக்கூடியவர். இப்பொழுது அவரைக் கொண்டு வந்த பிறகு நீங்கள் மீண்டும் அவரை மாற்றக்கூடாது. அவருக்கு நீங்கள் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். ஒருவேளை மீண்டும் மாற்றத்தை செய்தால் அது மோசமான விளைவுகளை உண்டாக்கி விடும்) என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -