இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்தும், எதிர்காலத்திற்காக தலைமை பயிற்சியாளர் கம்பீர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 350 ரன்கள் தாண்டி இலக்கை வைத்தோம் கூட இங்கிலாந்து அணிக்கு எதிராக ட்ரா கூட செய்ய முடியவில்லை. இறுதியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு இந்திய பவுலிங் யூனிட் முக்கிய காரணமாக இருந்தது.
எதிர்காலத்தின் மிகப்பெரிய கவலை
தற்போது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது பும்ரா தவிர வேறு யாரும் நம்பிக்கை தரக்கூடியவர்களாக இல்லை. ஓரளவுக்கு அனுபவம் கொண்டவராக இருக்கும் சிராஜ் தொடர்ந்து விக்கெட் கைப்பற்ற தடுமாறி வருகிறார்.
இந்த நிலையில் அனுபவ வீரர் முகமது சமி காயம் குணமடைந்தாலும் உடல் தகுதி பெறாத காரணத்தினால் இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. எனவே இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சு யூனிட் மிகவும் கவலை அளிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. எனவே எதிர்காலத்திற்கு வீரர்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு கம்பியிருக்கு இருக்கிறது.
சிராஜ் அந்த பவுலர் கிடையாது
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “சிராஜ் இந்திய பவுலிங் யூனிட் வழிநடத்தும் முதன்மை பவுலராக உருவாகவில்லை. கம்பீர் அப்படி அவரை நினைக்க முடியாது. இதில் பும்ராவை தவிர்த்து பார்த்தால் அர்ஸ்தீப், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா என அனைவருமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அனுபவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். தற்போது இந்திய டெஸ்ட் பவுலிங் யூனிட் சிறப்பானதாக இல்லை”
இதையும் படிங்க : 2வது டெஸ்ட்.. வலிமையான இந்திய உத்தேச பிளேயிங் XI.. 3 பிரில்லியன்ட் மாற்றங்கள்.. தொடர் சமன் ஆகுமா?
“எனவே எதிர்காலத்தை மனதில் வைத்து இளம் பந்துவீச்சாளர்களுக்கு தொடர் வாய்ப்புகள் கொடுக்கும் போதுதான் அவர்களை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நாம் பரிசோதித்து தெரிந்து கொள்ள முடியும். இதனால் கம்பீர் இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். சிராஜை முதன்மை பவுலராக கருதக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.






