இந்தியத் தேர்வுக்குழு ருதுராஜிடம் இந்திய அணியில் தேர்வு செய்யாதது குறித்தான காரணத்தை பேசி இருக்க வேண்டும் என இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு தொடர்ந்து இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்க தொடரில் சதம் அடித்த ருதுராஜுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
குழப்பமான தேர்வு
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் முதல் விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் இடம் பெற்று இருக்கிறார். இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் அணியில் இருக்கிறார். மேலும் இந்த அணியில் தொடக்க இடத்திற்கு பேக்கப் பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால், மிடில் ஆர்டர் பேக்கப் பேட்மேனாக ரிஷப் பண்ட் இருவரும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் ரிஷப் பண்ட் மிடில் ஆர்டர் பேக்கப் பேட்ஸ்மேன் இருப்பதால், அவரைக் கடந்த தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரிலேயே ருதுராஜ் விளையாடிய நான்காவது இடத்தில் விளையாட வைத்திருக்கலாம். அவர் அந்த இடத்தில் எப்படி விளையாடுகிறார்? என்று பார்த்திருக்கலாம். ஏனென்றால் ருதுராஜ் தொடர்ந்து இந்த இடத்தில் இருக்கப் போவதில்லை. இந்த நிலையில் இப்படி ஒரு குழப்பமான தேர்வு நடைபெற்றிருக்கிறது.
இது நடந்திருக்கலாம்
“ருதுராஜ் போன்று இந்திய அணிக்குள் அடிக்கடி வந்து செல்லும் ஒரு வீரரிடம் தேர்வு குழு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும். அது மிகவும் முக்கியமான ஒன்று. அப்படி இல்லாவிட்டால் வீரர்கள் மிகவும் குழப்பம் அடைந்து விடுவார்கள். எனவே தேர்வுக்குழு பேசி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க : அகர்கர் ஷமிக்கு செய்யறது அநீதி.. இது வெட்கக்கேடானது.. அவர் எந்த தப்பும் செய்யல – பெங்கால் பயிற்சியாளர் கூறியிருக்கிறார்
“ஒருவேளை இப்படி நடக்காவிட்டால் அது மிகவும் மோசமான ஒன்றாக இருக்கும். இப்படியான விஷயங்களால் நானே நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறேன். அவர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை, அவர் இந்திய அணியில் வருவதற்கான வாய்ப்புகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து பேச வேண்டும். அந்த புரிதல் இருக்கும் பொழுதுதான் வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார்.






