இந்தியத் தேர்வுக் குழு வேகப்பந்துவீச்சாளர் முகமது சாமிக்கு அநீதி செய்து வருவதாக பெங்கால் மாநில பயிற்சியாளர் ரத்தன் சுக்லா குற்றம் சாட்டி இருக்கிறார்.
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. டி20 உலக கோப்பை அருகில் இருப்பதால் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. எனவே முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரசித் கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டு ஷமி புறக்கணிக்கப்பட்டார்.
சிறப்பான செயல்பாடு
முகமது ஷமிக்கு உடல் தகுதி இல்லை என சொல்லப்பட்டது. ஆனால் அவர் தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் விளையாடி வருகிறார். சையத் முஸ்டாக் அலி தொடரில் 16 விக்கெட்டுகள், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் 11 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
அவருடைய உடல் தகுதி மற்றும் பந்துவீச்சு செயல்பாடு சிறப்பாக இருந்த போதும், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலையிலும், தொடர்ந்து இந்தியத் தேர்வுக்குழு அவரைப் புறக்கணித்து வருவது விமர்சனங்களை உண்டாக்கி இருக்கிறது. அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்து வைக்க பார்ப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
இது வெட்கக்கேடானது
இந்த நிலையில் பெங்கால் கிரிக்கெட்டில் இருந்து இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முகமது ஷமியை தேர்வு செய்ய வேண்டும் என ஏற்கனவே கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது இந்திய முன்னால் வீரர்கள் இடையே விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது.
இதையும் படிங்க : 4.69 ரன் ரேட்.. இங்கிலாந்துக்கு முதல் முறை கிடைத்த வாய்ப்பு.. நடுவில் நடந்த சோகம்.. ஆஸி மகிழ்ச்சி
இதுகுறித்து பெங்கால் மாநில கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் ரத்தன் சுக்லா கூறும் பொழுது “இந்திய தேர்வு குழு ஷமிக்கு அநீதி இழைத்து இருக்கிறது. சமீப காலங்களில் அவரைப் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் உள்நாட்டு போட்டிகளில் விளையாடியவர்கள் வேறு யாரும் கிடையாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர் இவ்வளவு உழைத்த பிறகும், தேர்வுக் குழு அவருக்கு செய்தது வெட்கக்கேடானது” என்று கூறியிருக்கிறார்.






