இந்திய டி20 அணியின் தற்போதைய தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தங்களுக்குள் பேசி சிறந்த முறையில் விளையாடுகிறார்கள் என இர்ஃபான் பதான் கூறியிருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் நல்ல முறையில் விளையாடுகிறார்கள். மிகக்குறிப்பாக அபிஷேக் ஷர்மா தாக்குதல் ஆட்டத்தின் மூலமாக இந்திய அணிக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்து வருகிறார்.
இதில் கில் மிகவும் டெக்னிக் உடன் விளையாடக் கூடியவராக இருக்கிறார். அதே சமயத்தில் அபிஷேக் ஷர்மா கண் மற்றும் கை ஒருங்கிணைவில் விளையாடக்கூடிய ஹேண்ட்ஸ் பிளேயராக இருக்கிறார். எனவே இவர்கள் இருவரையும் நீரும் நெருப்பும் காம்பினேஷன் என இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.
இத்துடன் இருவரும் பள்ளி காலத்தில் இருந்து ஒன்றாக கிரிக்கெட் விளையாடி வந்தவர்கள் என்பதால் சிறந்த நட்பும் அதனால் சிறந்த புரிதலும் இருக்கிறது. இதன் காரணமாக சூழ்நிலைகள் குறித்து பேசி அதற்கு ஏற்ற வகையில் பேட்டிங் செய்து வருகிறார்கள். இது இந்திய அணிக்கு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது.
இது குறித்து இர்ஃபான் பதான் பேசும் பொழுது ” அபிஷேக் மற்றும் கில் கூட்டணி தற்பொழுது மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஏனென்றால் நீங்கள் பேட்டிங் செய்யும்பொழுது உங்களுக்கு மறுமுனையில் பொருத்தமான இன்னொரு பேட்டர் தேவை. அவர்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் பொழுதும், ஒருவருக்கு ஒருவர் விஷயங்களை பேசி விளக்கிக் கொள்ளும் பொழுதும், ஒரு பௌண்டரி அடித்த பிறகு சிங்கிள் எடுக்கச் சொல்வது எனவும் அவர்கள் பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : அபிஷேக் ஷர்மா ஓபனிங் ஆடக்கூடாது.. சூர்யா ரன் எடுக்கலன்னா பிரச்சனை கிடையாது – தினேஷ் கார்த்திக் பேச்சு
“புதன்கிழமை பங்களாதேஷ் எதிரான போட்டியின் போது ஒரு ஓவரில் 15 ரன்கள் வந்துவிட்டது எனவே கடைசிப் பந்தை தாக்கி விளையாட வேண்டாம் எனில் அபிஷேக் சர்மாவிடம் சொன்னார். ஆனால் அபிஷேக் ஷர்மா அந்த பந்தில் சிக்ஸர் அடித்தார். இப்படி சில நேரங்களில் நடந்தாலும் அவர்கள் பொருத்தமான ஜோடியாக இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.