நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி சூப்பர் போர் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான், அடுத்ததாக நடைபெற உள்ள இறுதிப் போட்டி குறித்து சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நேற்று விளையாடிய இந்திய அணியில் பும்ரா மற்றும் சிவம் தூபே ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு களம் இறங்கி விளையாடிய இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை சமநிலையில் முடித்தது.
இந்த நிலையில் சூப்பர் ஓவரில் இந்திய அணிக்காக பந்து வீசிய அர்ஸ்தீப் சிங் அபாரமாக 6 பந்துகளில் இரண்டு ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து தனது அற்புதமான யார்க்கர் பந்துவீச்சால் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கூறும் போது இறுதிப்போட்டியில் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருவரும் விளையாட வேண்டும் என்பதே எனது எண்ணம் என அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “முதலில் அவர் ஒரு ஐஸ் போன்றவர். இந்திய அணி அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்கும்போது பந்தை கேட்டு அவர் வீசுகிறார். இறுதி ஓவர்களில் அவர் தனது யார்க்கர் பந்துகளை வீச தயாராக இருக்கிறார். பும்ரா மற்றும் அர்ஸ்தீப் இருவரும் ஒன்றாக விளையாடும் போது போட்டி முற்றிலும் சிறப்பாக இருக்கும். இது ஒன்றும் புதிதல்ல முதல் நாளில் இருந்து விளையாடும் போதே அர்ஸ்தீப் அணியில் இருக்க வேண்டும் என்று கூறினேன்.
இதையும் படிங்க:41 வருடம்.. ஆசிய கோப்பையில் முதல் வீரராக அபிஷேக் ஷர்மா வரலாற்று சாதனை.. ரிஸ்வான் ரெக்கார்டு காலி
இரண்டு முனைகளில் இருந்தும் யார்கர்கள் தேவைப்படும் சூழலில் இருக்கின்றன. இன்று போட்டி கடைசி வரை நீடித்தது, ஆனால் இந்திய அணியின் சிந்தனை என்னவென்றால் எங்களுக்கு நீண்ட ஒரு பேட்டிங் வரிசை தேவை என்பது தான். அதனால்தான் சிவம் தூபே அணியில் ஒரு ஆல் ரவுண்டராக விளையாடுகிறார். அவர் விளையாடுவதால் அர்ஸ்தீப்புக்கு விளையாட இடம் கிடைக்கவில்லை. ஆனால் அவர் எப்போதும் எனது பேயின் லெவனில் இருப்பார்” என்று பேசி இருக்கிறார்.