41 வருடம்.. ஆசிய கோப்பையில் முதல் வீரராக அபிஷேக் ஷர்மா வரலாற்று சாதனை.. ரிஸ்வான் ரெக்கார்டு காலி

0
129
Abhishek

இன்று ஆசியக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக அரைசதம் அடித்த இந்திய வீரர் அபிஷேக் சர்மா முதல் வீரராக பிரம்மாண்ட சாதனை படைத்திருக்கிறார்.

இந்திய அணி ஏற்கனவே இரண்டாவது சுற்றில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டி வெறும் சம்பிரதாய போட்டியாகவே அமைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

அடித்து நொறுக்கிய அபிஷேக்

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர் துணை கேப்டன் கில் 3 பந்தில் 4 ரன், அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணிக்கு கொஞ்சம் நெருக்கடி உருவானது.

இந்த நிலையில் வழக்கம்போல் ஒரு முனையில் அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா 22 பந்துகளில் தொடர்ச்சியாக மூன்றாவது அரை சதத்தை அடித்தார். அவர் மொத்தமாக 31 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 61 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

வரலாற்று சாதனை

இதன் மூலமாக 41 வருடமாக நடந்து வரும் ஆசியக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் 300 ரன் கடந்த முதல் வீரர் என்கின்ற சாதனையை படைத்தார். இதுவரையில் ஒரு ஆசிய கோப்பை தொடரில் முகமது ரிஸ்வான் 281 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 413 ரன்.. ஆஸிக்கு எதிராக கேஎல் ராகுல் பிரம்மாண்ட சதம்.. சாய் சுதர்சன் அசத்தல்.. இந்தியா வெற்றி

இதற்கு அடுத்து சஞ்சு சாம்சன் 23 பந்தில் 39 ரன்கள், ஹர்திக் பாண்டியா 3 பந்தில் 2 ரன்கள், திலக் வர்மா 34 பந்துகளில் 49* ரன், அக்சர் படேல் பந்துகளில் 21* ரன் எடுத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் முதல் முறையாக 200 ரன்கள் தாண்டி 202 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -