அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு மேற்கொண்டு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாத நிலை இருக்கிறது. இந்த நிலையில் அடுத்து இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு இளம் வீரருக்கு அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என இர்பான் பதான் கேட்டிருக்கிறார்.
தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விலகி இருக்கிறார்கள். மூவருமே போட்டியை தனியாக வெல்லக்கூடிய திறமை படைத்த மேட்ச் வின்னர்கள். எனவே இந்த பெரிய வீரர்களின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் திறமையான இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்.
இதற்கு முன் சில காலமாக இருந்த இந்திய வெள்ளைப்பந்து அணிகளில் பேட்டிங் யூனிட்டில் இருந்து பகுதி நேரமாக பந்து வீசக்கூடிய திறன் கொண்ட வீரர்கள் இல்லாமல் இருந்தது பெரிய பின்னடைவாக இருந்தது. இதன் காரணமாக ஒரு கூடுதல் பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முடியாமல் போனது.
மேலும் இந்திய அணியில் இடதுகை சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள்தேவையான அளவுக்கு இருக்கிறார்கள். ஆனால் வலதுகை ஆப் ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் யாரும் இல்லாததால் ஸ்பின் வெரைட்டி இல்லாமல் இருந்தது. உதாரணமாக மேக்ஸ்வெல் போன்ற ஒருவர் தேவைப்பட்டார்.
தற்போது இதுகுறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும் பொழுது “ரியான் பராக் தன்னுடைய பந்துவீச்சு திறமையின் காரணமாக பல வாய்ப்புகளை பெறுவதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக பலருக்கு பந்து வீசும் திறன் இல்லாமல் இருக்கிறது. இங்குதான் ரியான் பராக் கூடுதல் வாய்ப்பை பெறக் கூடியவராக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : 2வது டி20.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வெளியேறிய சுப்மன் கில்.. காரணம் என்ன?.. வெளியான தகவல்கள்
மேலும் இர்பான் பதானின் ட்வீட்டில் பந்து வீசக்கூடிய டாப் ஆர்டர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு அவர்கள் களத்தில் செயல்படுவதையும் தான் விரும்புவதாக இர்பான் பதான் கூறியிருக்கிறார். நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் 8 பந்துகள் வீசி 3 விக்கெட் யான்பரா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரியான் பராக் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டராகவே விளையாடி வருகிறார் என்பதும் முக்கியமானது!