2வது டி20.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வெளியேறிய சுப்மன் கில்.. காரணம் என்ன?.. வெளியான தகவல்கள்

0
633
Sanju

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டாவது போட்டியில் இன்று இரண்டு அணிகளும் விளையாடுகின்றன. இந்த போட்டியில் சுப்மன் கில் வெளியேற சஞ்சு சாம்சன் விளையாடும் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்று முகத்தில் பந்து தாக்கியதால் ரவி பிஸ்னாய் விளையாடுவாரா? என்கின்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் இன்று விளையாடுகிறார். இதன் காரணமாக இந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறவில்லை.

- Advertisement -

இலங்கை அணியில் காயம் பிரச்சனை காரணமாக தடுமாறும் வேகப்பந்துவீச்சாளர் தில்சன் மதுசங்கா வெளியேற்றப்பட்டு, அவருடைய இடத்திற்கு வலது கை ஆப் ஸ்பின்னர் ரமேஷ் மெண்டிஸ் கொண்டுவரப்பட்டிருக்கிறார். மற்றபடி நேற்று விளையாடிய அதே அணியுடன் இலங்கை விளையாடுகிறது.

இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் சுப் மன் கில்லுக்கு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு சரியாக காரணத்தினால் அவர் இன்றைய போட்டியை தவற விடுகிறார். அவருக்கு பதிலாக 15 பேர் கொண்ட அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இடம்பெற்ற சஞ்சு சாம்சன் விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்.

- Advertisement -

டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது “நாங்கள் முதலில் பந்து வீசுகிறோம். மேலும் வானிலை கொஞ்சம் மந்தமாக இருக்கிறது அத்தோடு இரண்டாம் பகுதியில் விக்கெட் பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் வசதியாக மாறுகிறது. நீங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் கூட தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்கிறீர்கள். விஷயங்களை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள். கில்லுக்கு முதுகுப் பிடிப்பு இருக்கின்ற காரணத்தினால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடுகிறார்” என்று கூறி இருக்கிறார்.

இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறும்பொழுது ” நாங்கள் முதலில் பேட்டிங் செய்வது நல்லதுதான். எங்களுக்கு ஒரு நல்ல மாற்றம் இருக்கிறது. தில்சன் மதுசங்காவுக்கு ரமேஷ் மெண்டிஸ் வருகிறார். எங்களுடைய முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் நன்றாக இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரே கவலை பந்துவீச்சு வரிசைதான். இது கடந்த போட்டியில் விளையாடிய ஆடுகளம். எனவே ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் ஸ்பின் நன்றாக எடுபடும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 165 ரன்.. கேட்ச்சை விட்டு.. ஆசியக் கோப்பையையும் விட்ட ஹர்மன்பிரித்.. மந்தனா அதிரடி வீண்.. இலங்கை சாம்பியன்

இந்திய அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் நேற்று 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கைப்பற்றினால் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -