இந்திய அணியின் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தனது பந்துவீச்சில் உடனடியாக மாற்றத்தை செய்தாக வேண்டும் என இருப்பதால் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு இன்னும் உறுதியாகாமல் சிக்கலில் இருப்பதற்கு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வி காரணமாக இருக்கிறது. அதே சமயத்தில் இந்த போட்டியில் மிடில் ஓவரில் வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சை தென் ஆப்பிரிக்க அணி அடித்து நொறுக்கியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
வருணின் திடீர் தடுமாற்றம்
தற்போது வரும் சக்கரவர்த்தி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிறைய ஷார்ட் பந்துகளை வீசுகிறார். இதன் காரணமாக அவருடைய பந்தை எளிதாக சிக்சர் அடிக்க முடிகிறது. ஜிம்பாப்வே அணி வரையில் எளிதாக இப்படியான பந்துகளை அடித்து இருக்கின்றன.
மேலும் அவர் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு கிரிசில் வலது புறத்தில் இருந்து பந்து வீசுகிறார். இதனால் அவரை இடது கை பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடுவதற்கு எளிதாக இருக்கிறது. எனவே அவர் இடது புறமாக வந்து வீச வேண்டியதும் அவசியமாகிறது.
இது சிக்கலை உண்டாக்கும்
இதுகுறித்து இர்பான் பதான் பேசும் பொழுது “தற்போது வரும் சக்கரவர்த்தி பந்துவீச்சு குறித்தான கவலை தொடர்கிறது. அவர் தனது பந்துகளில் 63% ஷார்ட் பந்துகளாக வீசி இருக்கிறார். சாதாரண பவுலர்களுடன் ஒப்பிடும் பொழுது இவர் கொஞ்சம் இந்த மாதிரியான பந்துகளை அதிகம் வீசுவார். இருந்தாலும் இந்த முறை அதிக சதவீதம் வீசி இருக்கிறார். இது திட்டமிட்ட மாற்றமாக இருந்தால் நிச்சயம் சிக்கலை உண்டாக்கும்”
இதையும் படிங்க : சூர்யா அந்த வேலையை செமி பைனல்ல பாத்துக்கலாம்.. வெஸ்ட் இண்டிஸ் கிட்ட அந்த பிளேயரை நம்ப வேணாம் – ஸ்ரீகாந்த் எச்சரிக்கை
“வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அவருக்கு நன்கு பழகிய கொல்கத்தா மைதானத்தில் அவர் எழுச்சி பெற முடியும். அவர் பந்தின் நீளத்தில் கொஞ்சம் மாற்றம் செய்தால் போதும். குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு கிரீசில் இடது புறமாக வந்து பந்து வீச வேண்டும். மேலும் அவர் ஆரம்பத்திலேயே ஒரு விக்கெட் கைப்பற்றினால் பெரிய அழுத்தத்தை உண்டாக்குவார்” என்று கூறியிருக்கிறார்.






