தற்போது இந்திய டி20 அணியில் விராட் கோலி விட்டு சென்ற ரோலை எடுத்து யார் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து இர்பான் பதான் வித்தியாசமான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக இருந்த போதிலும் கூட, அவர் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் சீராக விளையாடி பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். ஐசிசி தொடர்கள் என்று வரும்பொழுது அவருடைய ரோல் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
திலக் வர்மா அடுத்த விராட் கோலி
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விக்கெட்டுகள் மிக வேகமாக இந்திய அணி இழந்தது. இந்த நிலையில் ஒரு முனையில் நின்று கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்து திலக் வர்மா போட்டியையும் தொடரையும் வென்று கொடுத்தார்.
இதன் காரணமாக சூழ்நிலையை புரிந்து விளையாடுகின்ற காரணத்தினால் திலக் வர்மா விராட் கோலியின் ரோலில் செயல்படுவதற்கு மிகவும் தகுதியான வீரர் என பலரும் கூறி வந்தார்கள். இந்த நிலையில் இர்பான் பதான் வித்தியாசமான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இவர்தான் விராட் கோலி
இதுகுறித்து இர்பான் பதான் கூறும் பொழுது “இந்த உலகக் கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் மொத்தம் 119 பந்துகள் சந்தித்து விளையாடியிருக்கிறார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 136 என்று இருக்கிறது. ஆனால் இவருடைய ஆவரேஜ் 54 என்று அதிகமாக இருக்கிறது. பொதுவாக இவர் 150 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவார். ஆனால் தற்போது வித்தியாசமான அணுகு முறையில் விளையாடுகிறார். குறிப்பாக சூரியகுமார் யாதவ் விராட் கோலி போல செயல்படுகிறார்”
இதையும் படிங்க : இந்திய அணி இன்னைக்கு பதட்டத்தில் தான் இருக்கும்.. ஏற்கனவே நம்ப முடியாத ஒன்னு நடந்திருக்கு – அஸ்வின் எச்சரிக்கை
“மேலும் சூரிய குமார் யாதவ் மூன்றாவது இடத்தில் வந்து பேட்டிங் செய்ய முடியுமா? என்று பார்க்க வேண்டும். ஏனென்றால் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆப் ஸ்பின்னர்கள் தொடர்ந்து வருகிறார்கள். எனவே இவர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு சூரியகுமார் மாதிரி வலதுகை பேட்ஸ்மேன் மேலே வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






